MEDIA STATEMENTNATIONALSUKANKINI

பாரா ஆசியான் போட்டி கம்போடியாவில் நேற்று தொடங்கியது- மலேசியா சார்பில் 144 விளையாட்டார்கள் பங்கேற்பு

நோம் பென், ஜூன் 4- மாற்றுத் திறனாளி விளையாட்டாளர்களுக்கான பிரத்தியேகப் போட்டியான 12வது பாரா ஆசியான் விளையாட்டுப போட்டி நேற்றிரவு இங்குள்ள மோரோடோக் தெக்கோ தேசிய  விளையாட்டரங்கில்  கண்ணைக் கவரும் வாண வேடிக்கைகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது.

சுமார் 70,000 ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த தொடக்க நிகழ்வில் தென்கிழக்காசியாவில் உருவான கெமர் ஹார்ட் எனும் பிரசித்தி பெற்ற படைப்பும் அரங்கேற்றப்பட்டது.

இந்த தொடக்க நிகழ்வில் நடைபெற்ற அணிவகுப்பில் மலேசியா அணியைச் சேர்ந்த 34 விளையாட்டாளர்கள் மற்றும் 14 அதிகாரிகள் கொண்ட குழுவுக்கு நோர் ஷயிடா மாட் ஷா தலைமையேற்ற வேளையில் ஏஞ்சிலினா மெலிஸ் லாவாஸ் தேசிய கொடியை ஏந்தினார்.

மஞ்சள்  மற்றும் கருப்பு நிற ஜேக்கெட் மற்றும் டிர்க்சூட் அணிந்திருந்த மலேசிய அணியின இந்த அணிவிக்குப்பில் நான்காவது குழுவாக அரங்கில் நுழைந்தனர்.

இந்த போட்டி விளையாட்டினை கம்போடிய பிரதமர் ஹன் சென் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். வரும் வெள்ளிக்கிழமை வரை ஒரு வார காலத்திற்கு நடைபெறும் அந்த பாரா ஆசியான் போட்டியில் 11 நாடுகள் பங்கு கொள்கின்றன.

இந்த போட்டியில் மலேசியா சார்பில் 144 விளையாட்டாளர்கள் பங்கேற்கின்றனர். அவர்களில் 62 பேர் அல்லது 43 விழுக்காட்டினர் இப்போட்டியில் முதன் முறையாகப் பங்கேற்கும் புதுமுகங்களாவர்.


Pengarang :