NATIONAL

கிளந்தானில் 39 கிளினிக்குகளைச் சீரமைக்க வெ.96 லட்சம் ஒதுக்கீடு- சுகாதார அமைச்சர் தகவல்

கோத்தா பாரு, ஜூன் 6- கிளந்தான் மாநிலத்தில் மோசமான நிலையிலுள்ள
39 சுகாதார கிளினிக்குகளைச் சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ள
வேளையில் அவற்றை புனரமைப்பு செய்வதற்கு 96 லட்சம் வெள்ளியை
ஒதுக்கீடு செய்துள்ளது.

சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அடையாளம் காணப்பட்டுள்ள
கிளினிக்குகளில் 8 கிராமக் கிளினிக்குகள், 18 சுகாதாரக் கிளினிக்குகள் மற்றும்
13 பல் கிளினிக்குகளும் அடங்கும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர்
ஜலிஹா முஸ்தாபா கூறினார்.

இந்த சீரமைப்புப் பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக
மோசமான நிலையிலுள்ள சுகாதார வசதிகளை தரம் உயர்த்துவதற்கான
சிறப்பு பணிக்குழுவைச் சுகாதார அமைச்சு அமைத்துள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டார்.

கிளினிக்குகளில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளின் மேம்பாட்டைக்
காண்காணிக்கும் பொறுப்பு இந்த சிறப்பு பணிக்குழுவுக்கு
வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மலேசியர்களுக்குத் தரமான மருத்துவச் சேவை வழங்குவதற்கும் சுகாதாரப்
பணியாளர்களுக்கு வசதியான சூழலை ஏற்படுத்தித் தருவதற்கும் ஏதுவாக
மேற்கொள்ளப்படும் இந்த திட்டங்கள் சீரான முறையில்
நிறைவேற்றப்படும் எனத் தாங்கள் நம்புவதாக அவர் தனது பேஸ்புக்
பதிவில் தெரிவித்தார்.


Pengarang :