NATIONAL

2023 ஆம் ஆண்டுக்கான அனைத்துலகக் கபடி போட்டியில் மலேசியக் குழு இரண்டாம் இடத்தைப் பிடித்தது

இந்தோனேசியா பாலியில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான அனைத்துலகக் கபடி போட்டியில் மலேசியக் குழு வெள்ளி பதக்கத்தோடு இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

மலேசியக் கபடி சங்கத்தின் தலைமையில் இப்போட்டியில் 12 விளையாட்டாளர்கள் (7 சீனியர்கள், 5 ஜூனியர்கள்) பங்கேற்றதாக மலேசியக் குழுவின் நிர்வாகி மேஜர் சுப்பாராவ் போலையா கூறினார்.

மே 25 முதல் 29 வரை நடைபெற்ற இந்த கபடி போட்டியில் மலேசியாவுடன் தாய்லாந்து, சிங்கப்பூர், திமோர் லெஸ்தே மற்றும் இந்தோனேசியாவின் இரு குழுக்கள் களம் இறங்கின. அதில் மலேசியா ஒரு தோல்வியுடன் நான்கு வெற்றிகளை பதிவு செய்து இரண்டாம் இடத்தை பிடித்திருப்பது மகிழ்ச்சி அளித்திருப்பதாக மேஜர் சுப்பாராவ் தெரிவித்தார்.  மலேசியக் குழு 20 நாட்கள் மட்டுமே பயிற்சி பெற்று இந்த சாதனையை புரிந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

குறுகியக் காலப் பயிற்சியும் முயற்சியும் தங்களுக்குக் கை கொடுத்திருப்பதாக கூறும் சுப்பாராவ் எதிர்வரும் காலங்களில் இன்னும் சிறந்து விளங்கி கபடி போட்டியில் உயர்ந்த நிலையைப் பதிவு செய்ய முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த வெற்றியை அடைய துணை நின்ற மலேசியக் கபடி சங்கத்தின் பயிற்றுநர், பொறுப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் சுப்பாராவ் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.


Pengarang :