MEDIA STATEMENTNATIONAL

பிரதமர் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடவில்லை, சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கிறார்

கோலாலம்பூர், ஜூன் 11: எந்த ஒரு தனி நபரையும் பழிவாங்க நாட்டின் சட்ட அமைப்பைப் பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிராகரித்தார்.

அட்டர்னி ஜெனரல் மற்றும் நீதிபதிகள் எந்த ஒரு வழக்குத் தொடரும் கடமைகள் மற்றும் முடிவுகளில் அரசு தலையிடாது,  நாட்டின் சட்டங்களை எப்போதும் மதிப்பதாக அன்வார் கூறினார்.

“எனக்கு வெறுப்பு இருப்பது உண்மை என்றால், பலர் சுங்கை பூலோ சிறைக்கு அனுப்பப்பட வேண்டும், ஆனால் சட்டத்தின் கொள்கையை நாம் நிலைநிறுத்த வேண்டும் என்பதை நான் அறிவேன்.

“விசாரணை செய்யப்பட வேண்டும், குற்றம் சாட்டப் பட வேண்டும், அது எனது அதிகாரம் அல்ல, எனது அதிகாரம் பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் கடமைகளை உறுதியாகவும் தைரியமாகவும் செய்ய வழி காட்டுவது மட்டுமே” என்று அவர் கடைசியாக இங்கு “சிக்கு அண்டா” திரையரங்க நிகழ்ச்சியை பார்த்தப்பின்  பேசும்போது கூறினார்.

எந்த ஒரு வழக்கிலும் உறுதியான உண்மைகள் இருக்க வேண்டும் என்பதால், வழக்குத் தொடருமாறு அட்டர்னி ஜெனரலுக்கு அறிவுறுத்த முடியாது என்று அன்வார் கூறினார்.

எந்தவொரு தனிநபரையும் ஒடுக்குவதற்கு அதிகாரத்தைப் பயன்படுத்தும் தலைவராக இருக்க விரும்பவில்லை என்றும் அன்வார் கூறினார்.

நாட்டை வழிநடத்திய ஏழு மாதங்களில், நீதித்துறையின் பணியாளர்களை அவர் ஒருபோதும் மாற்ற வில்லை என்று பிரதமர் வலியுறுத்தினார்.

“தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட கோப்புகள் தனக்கு அனுப்பப்பட்டாலும், தான் நடைமுறையை வலுவாக கடைப் பிடிப்பதாவும்  தான் எதையும் மாற்றவோ திருத்தவோ இல்லை , நீதிபதியிடம் சர்ச்சைக்குரிய பதிவுகள் இருந்தால் தவிர,” என்று அவர் கூறினார்.

எனவே, இந்த நாட்டில் ஆட்சியும் நிர்வாகமும் பாதகமான கூறுகள் இல்லாமல் தூய்மைப் படுத்தப்பட வேண்டிய தருணம் இது என்றும், தேசிய அரசியலில் கூட மற்ற கட்சிகளின் கண்ணியத்தை கெடுக்கும் அல்லது உட்பூசல் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

“அரசியல் முக்கியம், நானும் ஒரு அரசியல் கட்சியை நிறுவி வழிநடத்திச் சென்றேன், அதில் இணைந்த கட்சிகள் மத்தியில், மற்ற கட்சிகளின் பலவீனங்களை தேடுவது முதிர்ச்சியற்ற அரசியல்” என்றும் அவர் கூறினார்.


Pengarang :