ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

எதிர்பாராத பெரும் வெள்ளத்திற்குப் பின்பும்  சிலாங்கூரின் எழுச்சி

ஷா ஆலம்  ஜூன் 17, ;-  கடந்த டிசம்பர் 17, 2021 இல் தொடங்கி மூன்று நாட்களுக்கு பெய்த பலத்த மழை பிறகு சிலாங்கூர் ஒரு பெரிய வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை.

மழைப்பொழிவு ஒரு நாளைக்கு 300 மில்லி மீட்டரைத் தாண்டியது, இது ஒரு மாதத்திற்கான சராசரி மழை அளவிற்கு சமமாக இருந்தது  3 நாள் மழை. மற்றும் கடல் பகுதிகளில் அதிக அலைகளின் நிகழ்வு குறுகிய காலத்தில் பல பகுதிகளை தண்ணீரில் மூழ்கடித்து.

இந்த திடீர், அசாதாரண பேரழிவானது சிலாங்கூர் வெள்ள மீட்பு யந்திரங்களின் ஆற்றலை விட அதிகமாக இருந்தது.  அது, ​​வடகிழக்கு பருவ மழைக்கான காலம் என்பதால், அனைத்து முன் ஏற்பாடுகளும் கிழக்கு கடற்கரை மாநிலங்களில்  குவிந்திருந்தன.
சிலாங்கூரின்  ஆற்றல் மிக்க தலைத்துவம்  

அப்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் 20 ஜனவரி 2022 அன்று டேவான் ராக்யாட்டில் அப்போதைய நிலையை விளக்கினார்.

இருந்தபோதிலும், டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விரைவாகச் செயல்பட்டார். டிசம்பர் 18-ம் தேதி தண்ணீர் பெருகும்போது ஒருங்கிணைப்பு கூட்டத்தை கூட்டினார். இராணுவம், போலீஸ்  மற்றும் பொது நடவடிக்கை படைகளின் உதவியுடன் துறைசார் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களுடன் மீட்பு நடவடிக்கைகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 19 டிசம்பர் 2021 அன்று ஷா ஆலம் பிரிவு 23, தாமான் ஸ்ரீ மூடா தேசியப் பள்ளியில் தாய்மார்கள், புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் மற்றும் சில முதியவர்களையும் மீட்க தானே களத்தில் இறங்கி செயல்பட்டார், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ  பாடுபட்டார்.

மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியான தாமன் ஸ்ரீ மூடா, ஷா ஆலம் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க அமிருடின் தானே களத்தில் இறங்கினார்.
பெரும் உயிரிழப்பு

பெரும் வெள்ளம் 25 உயிர்களைக் கொன்றது. 200க்கும் மேற்பட்ட தற்காலிக வெளியேற்ற மையங்களும் (பிபிஎஸ்) திறக்கப்பட்டன.

டிசம்பர் 21 அன்று, அமிருடின் RM 100 மில்லியன் நிதியுடன்  (சிலாங்கூர் மீண்டும் எழும்) பாண்டுவான் சிலாங்கூர் பாங்கிட்டை அறிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் RM1,000 மற்றும் இறந்தவர்களின் நெருங்கிய வாரிசுக்கு  RM 10,000 உதவித்தொகையும் வழங்க உத்தரவிட்டார்.

மார்ச் 7, 2022 நிலவரப்படி, 115,852 குடும்பங்கள் RM1,000 உதவியை RM115,852,000 ஒதுக்கீட்டில் பெற்றுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்கள் தலா RM 10,000 யை பெற்றது. ஆக மொத்தம் RM 140,000 வழங்கப்பட்டது.

வெள்ளம் வடிந்தவுடன், பெரிய அளவிலான மறுசீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டது.
சிலாங்கூரி ன்  எழுச்சிக்கு  துடிப்பு  மக்களின் பங்கு  

மாநில நிறுவனமான  KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவில் சுத்தம் செய்ய போர்கால அடிப்படையில் செயல் பட்டது.

அது, மொத்தம் 48,589.95 மெட்ரிக் டன்  வெள்ள கழிவுகளை  சுத்தம் செய்தது. திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்பு கழகம் (SWCorp WM) 33,200 மெட்ரிக் டன் கழிவுகளை அப்புறப்படுத்தியது. மொத்தத்தில், 141,186.84 மெட்ரிக் டன் கழிவுகள் KDEBWM மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் சுத்தம் செய்யப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுத்தம் செய்ய பல்வேறு பொது  மற்றும் மாநில அரசு அமைப்புகள், அரசு சாரா  சங்கங்கள் மற்றும் குழுக்கள் முன்வந்தன.

அவர்களில், 1,700க்கும் மேற்பட்ட குழு சிலாங்கூர் தன்னார்வலர்கள் மற்றும் 4,783 சிலாங்கூர் தன்னார்வலர்கள் (SERVE). மேலும், ஜனவரி 4ம் தேதி நிலவரப்படி 876 வீடுகள் பழுது நீக்கப்பட்டு, மேலும் 32 வீடுகள் புதிதாக கட்டப்பட்டது.

அதே காலகட்டத்தில் மொத்தம் 921 ஹிஜ்ரத் தொழிலதிபர்களுக்கு RM15 மில்லியன் நிதி பாதிப்புடன் இரண்டு மாதங்களுக்கு கடன் திருப்பிச் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டது. மேலும், ஒரு மாதத்திற்கு தண்ணீர் கட்டணம் செலுத்துவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 250 பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாநில அரசிடமிருந்து RM500,000 பெற்றனர், கூடுதலாக மத்திய அரசின் உதவி நேரடியாக வழங்கப்பட்டது.
மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பேரிடரைச் சமாளிக்க பல்வேறு உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

14 ஏப்ரல் 2022 அன்று, சுற்றுச்சூழல்  மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக நீர் மேலாண்மையை எளிதாக்குவதற்கும் கூடுதலாக வெள்ளப் பிரச்சினையை சமாளிக்க கிள்ளான் நதியை ஆழப்படுத்தும் பணிக்கு மாநில அரசு RM700 மில்லியனை அறிவித்தது.

நீண்ட கால வெள்ள தணிப்புக்கு
இப்பகுதியில் வடிகால் அமைப்பு மேம்படுத்த சிலாங்கூர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (JPS) மூலம் மொத்தம் RM10 மில்லியன் ஒதுக்கப்பட்டது. 2023 ஜூலையில் திட்டம் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

24 டிசம்பர் 2021 அன்று, வெள்ளப்பெருக்கு உள்ளான  ஜலான் சுங்கை ரசா மற்றும் ஜலான் பாடங் ஜாவாவை உள்ளடக்கிய வெள்ளத் தணிப்பு திட்டங்களுக்காக மாநில அரசு RM60 மில்லியனை ஒதுக்கியதை  அமிருடின் விளக்கினார்.

ஜே பி எஸ் சிலாங்கூர் மேலும் ஐந்து வெள்ளக் கட்டுப்பாட்டு திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக மொத்தம் RM1.3 பில்லியனை மத்திய அரசாங்கத்திடம் கோரியது. அவற்றில் தாமான் ஸ்ரீ முடா, ஜாலான் மேரு மற்றும் டமன்சாரா ஆகியவைகளுக்கான திட்டங்களும் அடங்கும்.


Pengarang :