ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

பி.கே.என்.எஸ். சொத்துடைமை விழாவில் மாநில அரசின் மலிவு விற்பனை

உலு சிலாங்கூர், ஜூன் 18- இங்குள்ள செரண்டா,  அந்தாரா காப்பியில் நேற்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.என்.எஸ்.)  2023ஆம் ஆண்டு டிஸ்கவர் சொத்துடைமை கண்காட்சியில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ரஹ்மா மலிவு விற்பனையும் இடம் பெற்றது.

இந்த சொத்துடைமை விழாவில் அதிகமானோர் கலந்து கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த மலிவு விற்பனை நடத்தப்பட்டதாக பி.கே.என்.எஸ் சொத்துடைமை மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைமைச் செயல்முறை அதிகாரி இஞ்சினியர் முகமது கமாருர்ஜமான் முகமது ராய்ஸ் கூறினார்.

இந்த சொத்துடைமை விழாவை ஏற்பாடு செய்வதன் மூலம் பி.கே.என்.எஸ். திட்டங்களை பிரபலப்படுத்தும் அதே வேளையில்  பொதுமக்கள் குறைந்த விலையில் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பினையும் ஏற்படுத்த முடியும் என்று அவர் சொன்னார்.

அதே சமயம், இந்த மலிவு விற்பனை சொத்துடைமை விழாவுக்கான ஒரு ஈர்ப்பு சக்தியாகவும் அதிகமானோர் பங்கேற்பதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும் அம்சமாகவும் விளங்கும் என்றார் அவர்.

நேற்று தொடங்கி இன்று வரை நடைபெறும் இந்த சொத்துடைமை கண்காட்சியில் 3,000 முதல் 5,000 பேர் வரை கலந்து கொள்வர் என எதிர்பார்ப்படுவதாக கூறிய அவர், பி.கே.என்.எஸ்.சின் இந்த முயற்சியை நிகழ்வுக்கு வந்த பலர் பெரிதும் வரவேற்றனர் என்றார்.


Pengarang :