SELANGOR

ஐந்து உணவு வளாகங்களில் உள்ள பொது கழிப்பறைகளை சுத்தம் செய்யும் நிர்வாக வாய்ப்பு- பி-40 பிரிவினர்

ஷா ஆலம், ஜூன் 19: செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) ஐந்து உணவு வளாகங்களிள் உள்ள பொது கழிப்பறையைச் சுத்தம் செய்யும் நிர்வாகத்தைக் குறைந்த வருமானம் கொண்ட குழுக்கள் (பி 40) மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) கையகப்படுத்தும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

அவை ஶ்ரீ செலேரா செலாயாங் நகராண்மை கழகம் பத்து 16, ரவாங், பண்டார் பாரு செலாயாங் நகராண்மை கழக உணவக வளாகம், கோம்பாக் ரியா செலாயாங் நகராண்மை கழக உணவக வளாகம், ரவாங் செலாயாங் நகராண்மை கழகம் ` Integrated“ உணவு வளாகம் மற்றும் ஶ்ரீ கோம்பாக் நெடுஞ்சாலை செலாயாங் நகராண்மை கழக உணவு வளாகம் என உள்ளூர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

“B40 குழு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைத் தவிர, ஒற்றைத் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் (OKU) இதற்கு விண்ணப்பிக்கலாம்” என்று எம்பிஎஸ் முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களுக்கான இறுதி நாள் ஜூன் 30 ஆகும். ஏதேனும் கேள்விகள் இருந்தால் எம்பிஎஸ் திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரத் துறையை 03-6126 6024 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.mps.gov.my என்ற இணையதளத்தைப் நாடலாம்.


Pengarang :