SELANGOR

755 பொருட்கள் எம்பிகே அமலாக்கப் பிரிவு  அலுவலகத்தில் ஏலம் விடப்படும்

ஷா ஆலம், ஜூன் 21: கிள்ளான் நகராண்மை கழகம் (எம்பிகே) மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகள் வழி  அது கைப்பற்றிய மொத்தம் 755 பொருட்கள் நாளை எம்பிகே அமலாக்க அலுவலகத்தில் பொதுமக்களுக்கு ஏலம் விட உள்ளது..

ஏல விற்பனை காலை 10 மணிக்குத் தொடங்கும் என்றும் பொதுமக்கள் எவ்வளவு பொருட்கள் வேண்டுமானாலும் வாங்க அனுமதிக்கப்படுவதாக உள்ளாட்சி அமைப்பு (பிபிடி) தெரிவித்துள்ளது.

“சாலைகள், வடிகால் மற்றும் கட்டிடங்கள் சட்டம் 1974 இன் பிரிவு 116 இன் கீழ் குறிப்பிடப் பட்டுள்ள பொருட்களைப் பொது ஏலத்திற்கு விடலாம், ஏனெனில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைக் கோருவதற்கு உரிமையாளரிடமிருந்து எங்களுக்கு எழுத்துப்பூர்வமான அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை.


இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேஸ், மின்விசிறிகள், கைப்பேசி உபகரணங்கள் என பல பொருட்களை விற்பனையில்  இடம்பெறும்.


Pengarang :