SELANGOR

இலக்கவியல் திட்டத்திற்கு மாற நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், ஜூன் 23: தங்கள் தொழிலை விரிவுபடுத்த விரும்பும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தொழில் முனைவோர், யாயாசன் ஹிஜ்ரா சிலாங்கூரின் (ஹிஜ்ரா) இலக்கவியல் ( கோ டிஜிட்டல் திட்ட) நிதியுதவிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

RM50,000 வரை வழங்கும் இந்த திட்டத்திற்கு mikrokredit.selangor.gov.my என்ற இணையத்தளம் அல்லது 19 ஹிஜ்ரா கிளைகளில் உள்ள நிதி அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் என முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

“தொழில் முனைவோர் சமீபத்திய மற்றும் நவீன தளங்கள் மூலம் டிஜிட்டல் வடிவில் வணிக முறைகளை மாற்ற உதவுவதற்காக கோ டிஜிட்டல் திட்டம் உருவாக்கப்பட்டது.

“டிஜிட்டல் பிசினஸ் மார்க்கெட்டிங் மூலம்,  தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சந்தைப்படுத்தும் திறனை மேம்படுத்த இந்த திட்டம் உதவும்; இறுதியில் இணைய விற்பனையிலிருந்து லாபத்தை அதிகரிக்க முடியும்” என தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை, மொத்தம் 5,795 தொழில்முனைவோர் ஹிஜ்ராவிடமிருந்து 92.37 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஏழு வணிக நிதியளிப்பு திட்டங்கள் மூலம் பலன் அடைந்தனர்.

கோ டிஜிட்டல் தவிர, ஐ-பிஸ்னஸ், ஜீரோ டு ஹீரோ, நியாக டாருல் ஏசான் (நாடி), ஐ –அக்ரோ, ஐ-லெஸ்தாரி மற்றும் ஐ-பெர்மூசிம் திட்டங்களையும் ஹிஜ்ரா வழங்குகிறது.


Pengarang :