SELANGOR

சுங்கை ரமால் தொகுதியில் அனிஸ் திட்டத்தின் கீழ் 192 சிறப்புக் குழந்தைகள் பலன் அடைந்தனர்

ஷா ஆலம், ஜூன் 23: சிலாங்கூர் சிறப்பு குழந்தைகள் (அனிஸ்) திட்டத்தின் கீழ் சுங்கை ரமால் தொகுதியில் மொத்தம் 192 சிறப்புக் குழந்தைகள் பலன் அடைந்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகள் அதிகபட்சமாக ஒரு முறை RM5000 பெறுவார்கள். இந்த தொகையை அவர்களின் தினசரி செலவுகள் மற்றும் கல்விக்குப் பயன்படுத்தப்படலாம் என அத்தொகுதியின் பிரதிநிதி மஸ்வான் ஜோஹர் கூறினார்.

“சிறப்பு குழந்தைகள் உட்பட குழந்தைகளுக்கான கொள்கைகள் அல்லது திட்டங்களைச் சிலாங்கூர் அரசு உருவாக்கியுள்ளது. இந்த உதவி குழந்தைகளின் திறனை அதிகரிக்கும் என்று நம்புகிறேன்.

“சிறப்புக் குழந்தைகளுக்கான ஆதரவை நாங்கள் வழங்க வேண்டும். மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே உள்ள ஒத்துழைப்போடு, சிறப்புக் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கண்டறிந்ததன் மூலம் இந்த உதவியை வழங்கும் நடவடிக்கை எளிதாக்கியுள்ளது,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இந்த உதவியானது ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக RM5,000 வரையில் ஒரு முறை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்குழந்தைகளுக்கான சிகிச்சை, மறுவாழ்வு, கல்வி மற்றும் வாழ்வாதாரச் (துணை உணவு/மருந்து) செலவுக்கான சுமையைக் குறைப்பதையே இந்த உதவியின் முக்கிய நோக்கமாகும்.

  சிறப்புக் குழந்தைகளின் மறுவாழ்வுக்காகச் சிறப்பு உபகரணங்களை வாங்க விரும்பும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் சுமையைக் குறைப்பதற்காகவும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.


Pengarang :