MEDIA STATEMENTNATIONAL

அந்நிய நாணய மாற்று மோசடி தொடர்பில் 77 பேர் கைது

கோலாலம்பூர் ஜூன் 24- இணையம் வாயிலாக அந்நிய நாணயங்களை மாற்றும் நடவடிக்கையில் மோசடி புரிந்த சந்தேகத்தின் பேரில் 77 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்ற புலனாய்வுப் பிரிவு மற்றும் உளவு/ நடவடிக்கை பிரிவு மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் 17 முதல் 37 வயது  வரையிலான  43 ஆண்களும் 34 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த சோதனை நடவடிக்கையில் 35 கணிணிகள், 29 மடிக்கணினிகள்,  ஒரு கையடக்க கணினி மற்றும் 38 தொழிலாளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அமிஹிஷாம் அப்துல் சுக்கோர் கூறினார்.

இந்த மோசடி தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420/ 120 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு  வரும் வேளையில் கைதான நபர்கள்   இம்மாதம்  24 ஆம் தேதி வரை விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

எந்த ஒரு நாணய மாற்று நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் முன் கைபேசி எண்கள் மற்றும் வங்கி கணக்கு எண்களை htpp://ccid.rmp.gov.my/semakmule/  என்ற அகப்பக்கம் வாயிலாக சோதித்துக் கொள்ளும்படி பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.


Pengarang :