EKSKLUSIFMEDIA STATEMENT

சிலாங்கூர் ஹரப்பான் தேர்தல்  இயந்திரம் முடுக்கி விடப்பட்டது.

செய்தி  சு.சுப்பையா
ஷா ஆலம், ஜூன் 24:  நேற்று, வெள்ளிக்கிழமை ஜூன் 23 அன்று, 14வது தவணைக்கான சிலாங்கூர் மாநில சட்டமன்றம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப் பட்டது,
இதனால்  சிலாங்கூர் மாநில தேர்தல்  PRN நடைபெற வழி வகுத்தது.  நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளந்தான் மற்றும் திராங்கானுவுடன்  மாநில தேர்தலை எதிர்க் கொள்ளும் ஆறு மாநிலங்களில் சிலாங்கூரும் ஒன்றாகும்.
இம்முறை *சிவப்பு மஞ்சள் எழுச்சி பேரணி*  அருஸ்மேராகுனிங் என்ற முழக்கத்தை தாங்கி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய சிலாங்கூர் ஹரப்பான் தேர்தல் இயந்திரம் தொடங்கப் பட்டது.
மாநிலத்தின்  அனைத்து தொகுதிகளையும்  பிரதிநிதித்து வருகைதந்த  சுமார் 5,000  ஆதரவாளர்கள் மற்றும்  கட்சி உறுப்பினர்கள்  புடைசூழ, அவர்களின்  உட்சாக  ஆராவரத்துடன்   மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள, சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் (ஹரப்பான்) மாநில தேர்தல் இயந்திரம்,  இன்று இரவு 8.00 மணிக்கு  ஷா ஆலம் சுதந்திர சதுக்கத்தில்  சிலாங்கூர்  சிவப்பு மஞ்சள் எழுச்சி பேரணி தலைவர் டத்தோ ஸ்ரீ  அமிருடின் ஷாரியால் முடுக்கி விடப்பட்டது

Pengarang :