ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நகைத் தொழில் துறைக்கு அந்நிய தொழிலாளர்களைத் தருவிக்க விரைவில் அனுமதி- சிவகுமார் கோடிக் காட்டினார் 

கோலாலம்பூர் , ஜூலை 2- நாட்டில் உள்ள இந்திய நகை பொற்கொல்லர் தொழில்துறைகளில் அந்நிய தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று அறிவித்தார்.

ஜெயபக்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் தலைமையில் நேற்று  நடைபெற்ற ஜெயபக்தி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஏற்கனவே உணவகம் உட்பட ஐந்து தொழில் துறைகளுக்கு அந்நிய தொழிலாளர்கள் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளான முடிதிருத்தும் நிலையங்கள், நகைக் கடைகள் மற்றும் ஜவுளியகங்கள்  ஆகியவற்றுக்கு அந்நிய தொழிலாளர்கள் கிடைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த ஜூன் 27 ஆம் தேதி நடைபெற்ற அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் மற்றும் உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சாலாவூடின் ஆயோப் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டு முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினேன்.

இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு 20,000 அந்நிய தொழிலாளர்கள் மட்டுமே தேவைப்படுகிறார்கள் என்று எடுத்துரைத்தேன். இந்த கூட்டத்தில் நகை பொற்கொல்லர் தொழில் துறைக்கு அனுமதி பெறப்பட்டது.

முடிதிருத்தும் நிலையங்கள் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் துறைக்கு அனுமதி பெறுவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார். இன்று நடைபெற்ற புத்தக விழாவில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்  பிரபாகரன், மலேசிய ஹராப்பான் மலேசிய சமூக நல இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் சுகுமாரன் கன்னி, டத்தின் ஷீலா, மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல், சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் தலைவர் சுதர்சன், மலேசிய தெலுங்கு சங்கத்தின் துணைத் தலைவர் சத்யா சுதாகரன், கோலாலம்பூர் வெற்றி சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் பி.எஸ். பிள்ளை , டாக்டர் மகேந்திரன், லெம்பா பந்தாய் கெஅடிலான் மகளிர் தலைவி ஷினா உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :