MEDIA STATEMENTSELANGOR

காகித நாணய நோட்டுகள் அச்சடிப்பதால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியுமா? .  – ரபிஸி ராம்லி கேள்வி

செய்திகள் -சு. சுப்பையா

பெ. ஜெயா. ஜூலை.5- மலேசியாவில்  பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதனை எதிர் நோக்க மலேசிய ரிங்கிட் அச்சடியுங்கள் என்று   பெரிக்காத்தான் நேஷனல்  உறுப்பினர்கள் மக்களவையில் கூறி வருகின்றனர். இவர்களுக்கு பணவீக்கம் என்னவென்றே தெரிய வில்லை என்று நாட்டின் பொருளாதார துறை அமைச்சர் ரபிஸி ராம்லி கூறினார்.

பணவீக்கத்தை அறிய உலகளவிய தரம் உள்ளது. இந்த தரத்தை உலக நாடுகள் அனைத்தும் கடைபிடிக்கின்றனர். கடந்த 33 மாதங்களாக பெரிக்காத்தான் செய்த  ஆட்சியால்,  நாடு தற்போது பண வீக்கத்தை எதிர்நோக்கியுள்ளது. இந்த பணவீக்கத்திற்கு பெரிக்காத்தான் முழு பொறுப்பு  ஏற்க வேண்டும்.

பண வீக்கத்தை  நீண்ட கால அடிப்படையில் முறையாக திட்டமிட்டு செயல் படுத்துவதாலே எதிர்நோக்கி மீட்சி பெற முடியும் என்று நேற்று தாமான் மேடன் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் இயந்திரத்தை சிலாங்கூர் மாநில மந்திரி புசாரோடு அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்த நிகழ்வுக்கு பின்னர் தேர்தல் பரப்புரை ஆற்றிய போது  பொருளாதார அமைச்சர்  ரபிஸி ராம்லி தெரிவித்தார்.

ஏன் நாட்டில் பணவீக்கம் நடைபெறுகிறது. ஏற்றுமதியாளர்கள் தங்கள் பணத்தை வெளிநாடுகளில்  வைத்துக் கொள்கிறார்கள். காரணம் உள்நாட்டு வங்கிகளை விட வெளி நாட்டு வங்கிகள் அதிக வட்டியை கொடுக்கின்றனர்.

நாமும் அவர்களை போல் வட்டியை உயர்த்தி கொடுப்போம் என்று பாஸ் மற்றும் பெர்சத்து உறுப்பினர்கள் கூறுகின்றனர் !

உள்நாட்டில் வட்டியை உயர்த்தினால் வங்கிகளில் கடன்  பெற்ற நம் நாட்டு மக்களின் நிலை  என்னவாகும் ?  அவர்கள் பெற்ற கடனுக்கான வட்டியும் உயர்த்த வேண்டியிருக்கும். இதனால் உள்நாட்டு மக்களுக்கு பெரும் நிதி சுமை ஏற்படும்.  குறிப்பாக பிடிபிடிஎன் கடன்தாரர்கள், நடுத்தர மக்களும் பெரும் நிதி சுமையை எதிர் நோக்க வேண்டியிருக்கும் என்று அவர் எதிர்க்கட்சியினருக்கு பதிலடி கொடுத்தார்.

இதே போல் சம்பள உயர்வு கொடுங்கள் என்று தற்போது எதிர்க்கட்சியினர் கூப்பாடு போடுகின்றனர். இவர்கள் ஆட்சி செய்த 33 மாத ஆட்சி காலத்தில் ஏன் சம்பள உயர்வு கொடுக்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மிக நீண்ட காலமாக நாட்டின் நிதி முறையாக நன்கு திட்டமிட்டு நிர்வாகம் செய்யப் படவில்லை. இதனால் தற்போது பணவீக்கம், ரிங்கிட் மதிப்பு வீழ்ச்சி போன்ற பிரச்னைகள் எழுந்து வருகிறது.

இந்த பிரச்னைகள் முறையாக தீர்வு காண நீண்ட அவகாசம் தேவை. நன்கு திட்டமிடாமல் அவர்கள் செய்த ஆட்சியின்  அலங்கோலத்தை, நாம் 6 மாத  காலத்தில்  மாற்ற முடியாது, அனைத்தையும் சரி செய்ய முடியாது  என்றார்  அவர்.

இதே போல் தான் 33 மாத ஆட்சியில் காலத்தில் கிளாந்தான் மாநில குடிநீர் பிரச்சனை முறையாக தீர்வு காணாமல், தற்போது நாட்டு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களிடம் குடிநீர் பிரச்னைக்கு உதவி செய்யுங்கள் என்று பாஸ் கட்சி கோரிக்கை வைக்கிறது.

கிளாந்தான் மாநில குடிநீர் பிரச்னைக்கு உடனடியாக ரி.ம. 8 பில்லியன் வேண்டும்மென்று கோரிக்கை வைக்கின்றனர்.

முன்பு மாநிலத்திலும் மத்தியிலும் பாஸ் ஆட்சிதான்,  ஏன் அப்போதே குடிநீர்.பிரச்னைக்கு தீர்வு காணவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

கிளாந்தான் மாநிலம் முழுவதும் முற்றிலும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண ஒரு பில்லியன் ரிங்கிட் போதும் எதற்கு 8 பில்லியன் கோரினார்கள். மக்கள் பணம் என்றால் கண்  மூடித்தனமாக கேட்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

பேச்சு வார்த்தைக்கு பின் நாட்டு பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 500 மில்லியன் ரிங்கிட் கொடுத்துள்ளார். கிளாந்தான் மாநில மக்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு தான் கடந்த  கால அரசாங்கத்திடம் வஞ்சக நோக்கமில்லாமல் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் செயல்பட்டார்.

நேற்று தாமான் மேடானில் நடைபெற்ற இந்த தேர்தல் பிரச்சார கூட்டம் இடையில் மழை பொழிந்ததால் சற்று தோய்வுக்கு பின்னர் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட  மக்களோடு  9.30 மணி முதல் இரவு மணி 12.00 வரையில் மிகவும் உற்சாகத்துடன் நடைபெற்று முடிந்தது.


Pengarang :