EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் மடாணி பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேசனல் ஒற்றுமை முன்னணியின்  தேர்தல் இயந்திரம்  பிரதமரால்  முடுக்கி விடப் பட்டது.

செய்திகள் சு. சுப்பையா

 

பண்டார் பாரு பாங்கி ஜூலை 8, நேற்று 7\7\2023 வெள்ளிக்கிழமை பண்டார் பாரு பாங்கி சிலாங்கூர்  நடைபெற்ற பக்கத்தான் ஹராப்பான்- பாரிசான் நேசனல் இணைந்த மடாணி ஒற்றுமை முன்னணியின்  தேர்தல் இயந்திர முடுக்கி விடும் வைபவத்தை  பிரதமர்  டத்தோ ஸ்ரீ   அன்வார் இப்ராஹிம் , துணை பிரதமரும் அம்னோவின்  தலைவருமான டத்தோஸ்ரீ அகமது சாஹிட் ஹமிடி, சிலாங்கூர் காபந்து அரசாங்கத்தின் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் இந்த இரு  அணிகளை சேர்ந்த கட்சித் தலைவர்களும்  தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

எங்கும் சிவப்பு மஞ்சள் நீல வர்ண அலை வீச கித்தா சிலாங்கூர் மற்றும் ஹிடுப் பெர்பாடுவானின் கூக்குரல் சிலாங்கூர் எதிரொலிக்க  ஒற்றுமை தேர்தல் அலை வீசியது.

பெரும் திரளாக  பத்து ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டது  முன்னணிக்கு முதல் கட்ட வெற்றியாக  அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.  குறிப்பாக  இஸ்லாமிய- மலாய்க்காரர்கள்  அதிகம் வசிக்கக் கூடிய பாங்கியில்  இப்படிப்பட்ட கூட்டம் திரண்டதுடன். பி. என்- அம்னோ ஆதரவாளர்களுடன்  பக்காத்தான்  ஆதரவாளர்களும்  குவிந்தது அம்னோவின் பலம் குறித்து கேள்வி எழுப்பிய பல விமர்சகர்களை  வாயடைக்க செய்துவிட்டது.

சிலாங்கூர் மடாணி பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேசனல் ஒற்றுமை முன்னணியின்  தேர்தல் இயந்திரம்  பிரதமரால்  முடுக்கி விடப் பட்டது.


Pengarang :