ECONOMYNATIONAL

மை லைசென்ஸ் திட்டம் விரிவாக்கத்திற்கு 1 கோடி வெள்ளி மானியம் கோரப்படும்- அந்தோணி லோக் தகவல்

பாலிக் பூலாவ், ஜூலை 8- குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர்
லைசென்ஸ் பெறுவதற்கு ஏதுவாக மை லைசென்ஸ் பி2 திட்டத்தை
விரிவாக்கம் செய்வதற்கு அடுத்தாண்டில் ஒரு கோடி வெள்ளியை
போக்குவரத்து அமைச்சு நிதியமைச்சிடம் கோரும்.

இத்திட்டத்தின் மூலம் இவ்வாண்டில் 9,000 பேர் பயனடைந்த வேளையில்
கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அடுத்தாண்டில் 30,000 பேர் வரை பயன்
பெற இயலும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்
கூறினார்.

இத்திட்டத்திற்கு இவ்வாண்டில் 27 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்ட
வேளையில் அடுத்தாண்டில் இரண்டு அல்லது மூன்று மடங்கு கூடுதலாக
அதாவது ஒரு கோடி வெள்ளி கோரப்படும் என அவர் தெரிவித்தார்.
சாலை விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டியதன் அவசியத்தையும் விழிப்புணர்வையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும்
அரசாங்கத்தின் முயற்சிக்கேற்பவும் இளைஞர்கள் மத்தியில் சாலை
விதிகளைக் கடைபிடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்த
நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

நேற்று இங்கு நடைபெற்ற மை லைசென்ஸ் பி2 திட்டத்தின் கீழ் மாநில
நிலையிலான வாகனமோட்டும் லை சென்ஸ்களை ஒப்படைக்கும்
நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.

இன்று இந்த நிகழ்வில் பாராட் டாயா மாவட்டத்தைச் சேர்ந்த 12
வாகனமோட்டும் பள்ளிகளைச் சேர்ந்த 293 பேர் மோட்டார் சைக்கிள்
லை சென்ஸ் பெற்றனர்.


Pengarang :