MEDIA STATEMENTNATIONAL

எதிர் கட்சிகள் அவதூறுகளை மட்டுமே பரப்புகின்றனர்  டத்தோ ஸ்ரீ அன்வார் குற்றச்சாட்டு.

செய்தி சு.சுப்பையா
பாங்கி.ஜூலை.7- கடந்த 6 மாத காலமாக  நாடாளுமன்றத்திற்கு வெளியே அவதூறுகளை மட்டுமே பரப்பி வருகின்றனர்.  எதிர்க்கட்சி என்ற முறையில் நாடாளுமன்றத்தில் அறிவுபூர்வமான குற்றச்சாட்டுகளை தெரிவிக்கவில்லை. 6 மாத காலமாக பெர்சத்துவும் பாஸ் கட்சியும் இதை செய்து வருகின்றனர்.
நாட்டு நலனில் இவர்களுக்கு அக்கறையில்லை. அறிவு பூர்வமான நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கான குற்றச்சாட்டுகளும் இது வரையில் கூறியதில்லை என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
நேற்று பாங்கியில் ஒற்றுமை அரசின் சார்பில் சிலாங்கூர் மாநில தேர்தல் இயந்திர வெள்ளோட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றினார். அவருடன் தேசிய முன்னணி தலைவரும் துணை பிரதமருமான டத்தோ ஸ்ரீ ஜஹிட் ஹமிடி, மத்திய அமைச்சர்கள், மாநில மந்திரி புசார் மற்றும் சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
எதிர்க்கட்சிகள் தினந்தோறும் அவதூறுகளை அள்ளி தெளிக்கின்றனர். மக்களவையில் எதிர் கட்சிகளின் பங்களிப்பு நிறைவாக இல்லை.
பெல்டா குடியேற்ற வாசிகள் பெரும் கடன் சுமையை எதிர் நோக்கி வந்தனர். மிக நீண்ட காலமாக இப்பிரச்னையில் 98% மலாய்க்காரர்கள் சிக்கி தவிக்கின்றனர். 33 மாத ஆட்சிக் காலத்திலும் இக்கடன் பிரச்சனையை முறையாக தீர்வு காணவில்லை. ஆனால் இதற்கு மாறாக பாஸ் கட்சியும் பெர்சத்துவும் மலாய்க்கார நலனை முன் வைத்து போராடுவது போல் கபட அரசியல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றன.
ஆனால் ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமர் என்ற முறையில் இக்கடன் பிரச்னைக்கு முறையான தீர்வை கண்டு விட்டேன் என்று கூறினார். நாட்டு மக்கள் நிலையான அரசியல் தன்மையையும் வலுவான பொருளாதாரத்தையும் எதிர் பார்க்கின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகள் நாட்டு நலனுக்காக மக்கள் நலனுக்கும் எதிராக செயல் படுகின்றனர்.
பல்லினங்கள் கொண்ட மலேசியாவில் மதவாத அரசியலை கிளப்புவது. இனவாத பிரச்சனைகளை தூண்டுவது. மலாய் அரசர்களை அழிப்பதாக அவதூறுகளை பரப்புவது தான் எதிர் கட்சிகளின் அன்றாட வாடிக்கை. இவர்களின் அவதூறுகளில் மக்கள் மதி மயங்கி விடக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
நிலையான பொருளாதாரத்தை நோக்கி திட்டமிட்டு அரசு செயல்படுகிறது. ஆனால் வாரம் தோறும் மாதந்தோறும் அவதூறுகளை தான் பரப்பி வருகின்றனர்.
அவர்களுக்கு போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் என்றால் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறை வேற்றி முறையான வழியில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
நாட்டு மக்களிடம் அவதூறுகளை பரப்பி அரசு மேற்கொள்ளும் பொருளாதார நடவடிக்கைகளை சீர் குலைக்க வேண்டாம். நாட்டு மக்களுக்கு நல்லதை செய்ய விடுங்கள்  என்று மிகவும் பணிவுடன் கேட்டுக் கொண்டார். நேற்று பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் அணி திரண்டு வந்திருந்தனர். ஒற்றுமை அரசின் இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மகத்தான வெற்றிக்கு வழி வகுத்துள்ளது என்றால் அது மிகையாகாது.

Pengarang :