ELMEDIA STATEMENT

புக்கிட் மெலாவத்தி கெ அடிலான்  தேர்தல் இயந்திரம் மற்றும் நடவடிக்கை அறை துவக்க விழா

கோல சிலாங்கூர் ஜூலை 10 ;- நேற்று  ஞாயிற்றுக்கிழமை இரவு கோலசிலாங்கூர்  புக்கிட்   மெலாவத்தி தொகுதியின் தேர்தல்  அறை  தாமான் ரூ, புக்கிட்  மெலாவத்தியில்  திறக்கப்பட்டது.

தொகுதியின்  பி.கே.ஆர்.தேர்தல்  அறை  திறப்பு விழாவில்  சிறப்பு விருந்தினராக  மாண்புமிகு திரு: யுவனேஸ்வரன் (செகாமட் நாடாளுமன்ற உறுப்பினர்), மதிப்புமிகு டத்தோ டாக்டர் ஜூல்கிப்லி அமாட் , புவான் ஜூவாரியா (முன்னால் சட்டமன்ற உறுப்பினர்), பி.கே.ஆர்.கோலசிலாங்கூர் கட்சியின் தலைவர்  தீபன் சுப்ரமணியம், மதிப்புமிகு ஹஜி யாஹ்யா, (கோலசிலாங்கூர் அம்னோ தலைவர்) மதிப்புமிகு பாய்ஷால் (கோலசிலாங்கூர் அமானா  தொகுதி தலைவர்) மற்றும் கோலசிலாங்கூர் நகராண்மை கழக உறுப்பினர்கள் மற்றும் கெ அடிலான் ,பாரிசான்  கட்சிகளின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்தத் தேர்தல் பணி  அறை திறப்பு விழாவில்,  கோல சிலாங்கூரில் வசிக்கும் மக்கள் இம்முறை  கெ அடிலான் கட்சிக்கு  முழு ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் பட்டது.
இந்த நிகழ்வின் முதல் அங்கமாக இந்த  நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய கட்சித் தலைவர்களின் உரைகளில் ஆறு மாநிலங்களில் நடைபெற இருக்கின்ற தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
நமது எண்ணம் மற்றும் செயல்கள்  ஒன்றாக இருந்தால்தான் நாம் நமது இலக்கை அடைய முடியும். கடந்த காலங்களில் கிடைக்க பெற்ற வெற்றியை விட இந்தத்  தேர்தல் நமக்கு ஓர் திருப்புமுனையாக அமைய வேண்டும்.
 இன்று பாரிசான் கட்சியும்,பாக்காத்தான் கட்சியும் ,ஒற்றிணைந்து ஒற்றுமையான மத்தியில் அரசாங்கமாக உருவெடுத்துள்ளது.  இன்றைய நமது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் தலைமையில் நாடு ஒன்றுபட்ட  அரசாங்கம் இன்று சிறப்பாக இயங்கி வருகிறது. அதுப்போல் நாமும் ஒன்றுபட்டுக் கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.  அனைவரும்  ஒன்றுப்பட்டு  பாடுபட்டால் நாம் வெற்றியை அடைய முடியும் என்று  வந்திருந்த தலைவர்கள்  வலியுறுத்தினர்.
நிகழ்வின்  இறுதியில்  பேசிய சிகாமட் நாடளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு  யுவனேஸ்வரனின்  அவரின் உறையில் தான்  சிகாமட்  தொகுதியில்  இருந்து  இங்கு வந்ததற்குப் பெருமை கொள்வதாகவும், அதே சமயம் வரும் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் மகத்தான வெற்றியை  இங்கு மட்டுமின்றி  ஆறு மாநிலங்களில்  உறுதி செய்ய வேண்டும்   என்று  கேட்டுக்கொண்டார்.
தேர்தல்  பிரச்சாரங்கள்  சூடுபறக்க நடத்த வேண்டும், மக்களின் நல்ல ஆதரவைப்   பெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்  என்றார். இந் நேரத்தில் ஒவ்வொரு நிமிடமும் நமது வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க  முனைப்பு காட்ட  வேண்டும்.
 பாரிசான் – பாக்காத்தான் ஹராப்பான் ஒற்றுமையை வலுப்படுத்த அனைவரிடத்திலும்  ஓட்டு வேட்டையாடுவதில்  மும்முரம் காட்ட வேண்டிக்கொண்டார்


Pengarang :