ECONOMYSELANGOR

சிப்பாங், சபாக் பெர்ணம் வரை பொது போக்குவரத்து முறை விரிவுபடுத்தப்படும்- மந்திரி பெசார்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 16– சிலாங்கூர் மாநிலத்தில் பொது போக்குவரத்து முறை சிப்பாங் மற்றும் சபாக் பெர்ணம் வரை விரிவுபடுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வரும் 2030ஆம் ஆண்டு வாக்கில் பொது மக்கள் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

கிள்ளான் வழித்தடத்தை கோல சிலாங்கூர், சபாக் பெர்ணம், சிப்பாங் ஆகிய நகரங்கள் முதல் புத்ரா ஹைட்ஸ் அல்லது கோல லங்காட் வரை நாம் விரிவுபடுத்தவிருக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில் பொது மற்றும் சொந்த வானங்களின் விகிதாசாரம் 6-4 என்ற அளவில் இருப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமற்றது போல் தோன்றினாலும் இதனை நாம் சாத்தியப்படுத்தலாம் என அவர்  குறிப்பிட்டார்.

நேற்று இங்கு நடைபெற்ற “சுவாரா அனாக் மூடா இனி மாசா காமி“ எனும் இளையோர் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு சொன்னார்.

தற்போது கிழக்குக் கரை இரயில் திட்டப் பணிகள் சிலாங்கூரின் வட பகுதியில் தரை, சுரங்கப்பாதை மற்றும் உயர்மட்ட திட்டங்கள் வாயிலாக 92.72 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டு வருகிறது.


Pengarang :