SELANGOR

மலிவு விற்பனை திட்டம் குடியிருப்பாளர்களின் செலவுச் சுமையைக் குறைக்கிறது

ஷா ஆலம், ஜூலை 21: சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகம் (பிகேபிஎஸ்) ஏற்பாடு செய்துள்ள மலிவு விற்பனைத் திட்டம் (ஜேஇஆர்) குடியிருப்பாளர்களின் செலவுச் சுமையைக் குறைக்க அடிக்கடி நடத்தப்பட வேண்டும்.

குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியும், என்பதால் மலிவான விற்பனைத் திட்டத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக 52 வயதான ஷரிசா மாட் ஜின் என்ற இல்லத்தரசி கூறினார். ஏனெனில் இதனால் சமையலறை செலவு மிச்சமாகும் என்றார்.

“இந்த திட்டம் தொடர்ந்து ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளில் நடத்தப்படும் என்று நம்புகிறேன். மேலும் பலவகையான பொருட்களை இந்த விற்பனையில் சேர்க்கவும் ,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சந்தையுடன் ஒப்பிடும்போது இங்கே விற்கப்படும் பொருட்கள் மலிவாகவும் தரமாகவும் உள்ளன என்று லாரி டிரைவர் சதாசிவம் (46) தெரிவித்தார். “வாங்கிய பொருளில் திருப்தி அடைகிறேன். ஒரு பெரிய கோழி RM10 மட்டுமே. மேலும் அரிசியும் தரமானது என்றார்.

“இந்த திட்டம் நீடிக்கும் என்று நம்புகிறேன் காரணம் சந்தையில் வாங்குவதற்கு அதிக பணம் செலவாகிறது,” என்றார்.

இதுவரை இந்த மலிவு விற்பனை திட்டம் மாநிலம் முழுவதும் 2,400 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 4.5 மில்லியன் குடியிருப்பாளர்கள் பயனடைந்துள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.


Pengarang :