SELANGOR

தாமான் சௌஜானா பூச்சோங் பென்யாயாங் சமூக திட்டத்தின் வழி RM425,209 செலவில் மண்டபம்

சுபாங் ஜெயா, ஜூலை 21: எதிர்வரும் அக்டோபரில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படும் தாமான் சௌஜானா பூச்சோங் பென்யாயாங் சமூக மண்டபம் 10,000க்கும் மேற்பட்ட உள்ளூர் சமூகங்களுக்கு பயனாக அமையும்.

இந்த வளாகம் RM425,209 செலவில் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் (PSP) நிதியைப் பயன்படுத்தி கட்டப்பட்டது என்று ஒற்றுமை மற்றும் சுகாதார  எஸ்கோ டாக்டர் சித்தி மரியா மஹ்மூட் கூறினார்.

“இந்த ஆண்டுதான் எங்களுக்கு ஒப்புதல் (வளாகத்தை உருவாக்க) கிடைத்தது. இது தேர்தல் வித்தை அல்ல, ஏனெனில் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே இந்த திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம்.

“இந்த வளாகத்தில் ஓய்வு நேர நடவடிக்கைகள், சமூக நிகழ்ச்சிகள், கல்வி, விருந்துகள் மற்றும் திருமண விழாக்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திறந்த மண்டபம் உள்ளது.

அவர் தாமான் சௌஜானா பூச்சோங் பென்யாயாங் சமூக வளாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.  இதில் சுபாங் ஜெயா நகராண்மை கழகத் துணை மேயர் முகமட் சுல்குர்னைன் சே அலியும் கலந்து கொண்டார்.

2018 ஆம் ஆண்டில் அப்பகுதியின் பிரதிநிதியாகத் தனக்கு வாக்களித்த பின்  அங்கு  மேற்கொள்ளக்கூடிய மிகப்பெரிய திட்டம் இது என்று ஶ்ரீ செர்டாங் தொகுதியில் நடப்பு உறுப்பினராக இருக்கும் டாக்டர் சித்தி மரியா தெரிவித்தார்.

இதற்கிடையில், 800 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த வளாகத்தில் பார்க்கிங், கழிப்பறைகள், பல்நோக்கு மையங்கள் மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கான திறந்தவெளி இடங்கள் போன்ற பல்வேறு பொது வசதிகள் உள்ளன என முகமட் சுல்குர்னைன் கூறினார்.


Pengarang :