SELANGOR

பொதுமக்களுக்காகக் ‘கித்தாகான் சிலாங்கூர்’ ` மினி ஒற்றுமை விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன

ஷா ஆலம், ஜூலை 21: இந்த ஞாயிற்றுக்கிழமை ‘கித்தாகான் சிலாங்கூர்’ ` மினி ஒற்றுமை கண்காட்சி 2023 யை முன்னிட்டு ஒற்றுமை ஸ்கெட்ச் மற்றும் பாரம்பரிய சமையல் போட்டிகள் பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

சிலாங்கூர் மாநில ஒற்றுமை கவுன்சிலால் (MPIS) டேவான் ஸ்ரீ புத்ரா, பந்திங்கில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில் அரசு நிறுவனங்களின் விற்பனைகள் மற்றும் கண்காட்சிகளும் இடம்பெறவுள்ளன.

குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் போட்டிகள், பாரம்பரிய ஆடைப் போட்டிகள் மற்றும் அதிர்ஷ்டக் குலுக்கு ஆகியவையும் வருகையாளர்களுக்காகக் காத்திருக்கின்றன.

“அனைத்து நிகழ்வுகளிலும் இலவசமாகப் பங்கேற்கலாம் மற்றும் வெற்றியாளர்கள் ரொக்கப் பரிசு, கோப்பைகள் மற்றும் பங்கேற்புச் சான்றிதழ்களைப் பெறுவார்கள்” என்று சிலாங்கூர் மாநில ஒற்றுமை கவுன்சில் முகநூலில் தெரிவித்துள்ளது.

போட்டியில் பங்கேற்க விரும்புவோர் https://bit.ly/3ru2zkh என்ற இணைப்பில் பதிவு செய்யலாம் அல்லது 010-5099 116 (சுஹானா) என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மேலும் விவரங்கள் அறியலாம்.


Pengarang :