ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஆறு மாநிலங்களில் பாரிசானுக்கு 108 இடங்கள் ஒதுக்கீடு- சிலாங்கூரில் 12 தொகுதிகளில் களம் காண்கிறது

ஷா ஆலம், ஜூலை 22- வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி நடைபெற இருக்கும் சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் 12 தொகுதிகளில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் பெயரை பாரிசான் நேஷனல் (தேசிய முன்னணி) தெரிவித்துள்ளது.

இந்த வேட்பாளர் பட்டியலை தேசிய முன்னணித் தலைவர் டத்தோ ஸ்ரீ சைட் ஹமிடி நேற்றிரவு அறிவித்தார். அந்த கூட்டணி போட்டியிடும் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வருமாறு-

1. சுங்கை ஆயர் தாவார் தொகுதி (டத்தோ ரிஸாம் இஸ்மாயில்)

2. சுங்கை பாஞ்சாங் தொகுதி (டத்தோ முகமது இம்ரான் தம்ரின்)

3. பத்தாங் காலி தொகுதி (டத்தோ முகமது இசா அப்துல் காசிம்)

4. சுங்கை பூரோங் தொகுதி (முகமது கிர் ரம்லி)

5. குவாங் தொகுதி-(டத்தோ ஹஸ்னால் மரைக்கான் ஹபிப் மரைக்கான்)

6. ஜெராம் தொகுதி (டத்தோ ஜஹாயா இப்ராஹிம்)

7. கோம்பாக் செத்தியா  (டத்தோ மெகாட் ஜூல்கர்னாய்ன் ஓமார்டின்)

 8. டுசுன் துவா தொகுதி (டத்தோ ஜோஹான் அப்துல் அஜிஸ்)

 9. செமினி தொகுதி ( வான் ஜூலைகா அனுவா)

10. செலாட் கிளாங் தொகுதி (டத்தோ ரோஸ்லி அப்துல் ஹமிட்)

11. சிஜங்காங் தொகுதி ( முகமது அல்-ஹபிஸி அபு பாக்கார்)

12. டெங்கில் தொகுதி ( நோராஸ்லி சைட்)

சிலாங்கூர் உள்ளிட்ட ஆறு தொகுதிகளில் இம்மாதம் 29 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் ஆகஸ்டு 12ஆம் தேதி வாக்களிப்பும் நடைபெறவுள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில் மொத்தம் 56 தொகுதிகள் உள்ள நிலையில் பினாங்கில் 40 தொகுதிகளும் நெகிரி செம்பிலானில் 36 தொகுதிகளும் கெடாவில் 36 தொகுதிகளும், கிளந்தானில் 45 தொகுதிகளும் திரங்கானுவில் 32 தொகுதிகளும் உள்ளன.

இந்த ஆறு மாநிலங்களிலும் தேசிய முன்னணி மொத்தம் 108 தொகுதிகளில்  போட்டியிட உள்ளது.


Pengarang :