MEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் மாநில பி கேஆர் வேட்பாளரில் 60% புது முகங்கள்.

செய்தி ;- சு.சுப்பையா

ஷா ஆலம். ஜூலை.22-  சிலாங்கூர் மாநிலத்தில் 20 சட்டமன்ற தொகுதிகளில் பிகேஆர் கட்சி வேட்பாளர்கள் இம்முறை களத்தில் இறக்கி விடப் பட்டுள்ளனர். இதில் 8 சட்டமன்ற தொகுதிகளில் பழைய வேட்பாளர்கள் மீண்டும் தற்காத்து போட்டியிடுகின்றனர். ஆனால் 12 தொகுதிகளில் இளம் புதிய வேட்பாளர்கள் களம் இறக்கப் பட்டுள்ளனர்.

இந்த பழைய வேட்பாளர்களில் முதல் இடம் பிடிப்பவர் சிலாங்கூர் மாநில நடப்பு மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி. அவரது சிறப்பான சேவையை டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெகுவாக பாராட்டினார். மக்கள் நலனில்  அக்கறை கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன்.  2008ம் ஆண்டு பக்காத்தான் ராயாட்  அரசாங்கத்தின்  கொள்கையான  ”மாநிலத்தின் வளம் மக்களுக்கே”  என்ற தத்துவத்தை  வெற்றிகரமாக  அமல் படுத்தி வருவதுடன், மக்கள் மத்தியிலும் ,பொருளாதார ரீதியிலும்   . நாடளவில் சிலாங்கூர் மாநிலத்தை முன்னணி மாநிலமாக கொண்டு வருவதில் டத்தோ ஸ்ரீ அமிருடினின் சேவை மகத்தானது என்பதால்  அதே தொகுதியை  தற்காப்பத்துடன், மாநில மந்திரி புசாராகவும்  பெயர் குறிப்பிடப்பட்டார்

தஞ்சோங் சிப்பாட் தொகுதியில் புர்ஹான் அமான், சுங்கை காண்டீஸ்  தொகுதியில் சவாவி, செந்தோசாவில் குணராஜ், கிள்ளான் துறைமுகத் தொகுதியில் அஸ்மிசாம், ஷா ஆலம் கோத்த அங்கிரிக்கில் முகமது நஜ்வான், சுங்கை பூலோ பாயா ஜெராஸ் தொகுதியில் கைருடின் ஓத்மான், ரவாங் தொகுதியில் சுவா வை கியாட் என்று 8 தொகுதிகளில் பழைய முகங்கள் தற்காத்து போட்டியிடுகின்றனர்.

சிலாங்கூரில் மிகவும் பரபரப்பாக எதிர் பார்க்கப் பட்ட மூன்று தொகுதிகள் சொந்தோசா, புக்கிட் மெலாவாத்தி மற்றும் ஈஜோக் சட்ட மன்ற தொகுதிகள்.

நாட்டில் அதிக இந்திய வாக்காளர்களை கொண்டதான  செந்தோசா தொகுதி. அதை முன்னாள் ஆட்சி குழு உறுப்பினர்  டாக்டர் சேவியர் ஜெயக்குமார் இரண்டு முறை  வென்றதுடன், தொகுதியில் இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கை  வெகுவாக உயர்த்தவும் , கட்சிக்கு  நம்பிக்கையான  தொகுதியாக்க பாடுபட்டார்.

இம்முறை சில சலசலப்புகளுக்கு உள்ளே அதனை மீண்டும் கட்சிக்கே  தற்காத்துக் கொள்ள கடந்த முறை  இந்த தொகுதியில் வென்ற குணராஜ்  போராட்டம் நடத்தி வெற்றி பெற்று  அவரும், மீண்டும் அத்தொகுதிக்கான  வேட்பாளராகி உள்ளார்.

இதில் 2008 ஆம் ஆண்டு முதல் புக்கிட் மெலாவத்தி தொகுதி பி கேஆர் கட்சியின் சார்பில் இந்திய வேட்பாளர்கள் நிறுத்தப் பட்டு வருகின்றனர். 2008 ஆண்டு பொதுத் தேர்தலில்  பொறியியலாளர் முத்தையா போட்டி போட்டு மகத்தான வெற்றி பெற்றார். ஆனால் 2013 ஆம் ஆண்டில் இத்தொகுதியில் காப்பார் முன்னாள்  நாடாளுமன்ற  உறுப்பினர் மாணிக்கவாசகம் போட்டியிட்டு துரதிஸ்டவசமாக  தொகுதியை தேசிய முன்னணியிடம் பறி கொடுத்தார்.

ஆனால் 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் வழக்கறிஞர் சிவமலர் வேட்பாளராக நிறுத்தப் பட்டார். ஆனால் அவரது வேட்பாளர் மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப் பட்ட  அவசர  தருணத்தில்  ஜுவாரியா மாற்று வேட்பாளராக  நிறுத்தப் பட்டார்.


இதனால் புக்கிட் மெலாவத்தி தொகுதி மீண்டும் இந்திய சமுதாயம் கை வசம் வருமா என்று எதிர்பார்ப்பு இருந்தது. பல  மாதிரியான  ஆருடங்களை  பொய்யாக்கும் விதமாக
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இத்தொகுதியில்  மீண்டும் இந்திய சமுதாய நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான தீபன் சுப்ரமணியத்தை வேட்பாளராக அறிவித்து,
 மலேசிய இந்தியர்கள் நலனில்  அவர் கொண்டுள்ள அக்கறையினை நிரூபித்துள்ளார்.

அதே போல், கட்சி அமைக்கப்பட்ட 1998 ம் ஆண்டுகளிலிருந்து  போராடி வருபவர், இருண்ட காலக் கட்டத்தில் கட்சிக்காக சில முறை போலீசாரின் விருந்தினராக இருந்துள்ள  முகமது யாஹ்யா  
 பெர்மாத்தாங் தொகுதியில்   போட்டியிட உள்ளார். ஈஜோக் தொகுதியில் ஹாமிடி, உலு கிள்ளாங்  தொகுதியில் ஜுவாரியா, புக்கிட் அந்தாராபங்சாவில் கம்ரி கமாருடின், லெம்பா ஜெயாவில் சையட் அஹ்மாட் அல்திமெட், காஜாங் தொகுதியில் டேவிட் சியோங், தாமான் மேடான் தொகுதியில் அமாட் ஆக்கிர், புக்கிட் லஞ்சான் தொகுதியில் புவா பெய் லாய், கோத்தா டமன்சாராவில் அய்டி அமின், செமந்தாவில் எர்னி அவ்ரிசா அஸிசி ஆகியோர் அறிவிக்கப்பட்ட   வேட்பாளர்கள்.  இவர்களில் எர்னி அவ்ரிசா ஆகக் குறைந்த வயது வேட்பாளர் ஆவார், இவருக்கு 25 வயதாகும்.

ஆக மொத்தத்தில் சிலாங்கூர் வேட்பாளர்களில் 60% பேர் புதிய முகங்கள். ஆனால் இவர்கள் அனைவரும் பி கேஆர் கட்சியில் சிறப்பாக சேவையாற்றி வருபவர்கள் என்பது குறிப்பிட தக்கது.
துடிப்பு மிக்க இளம் தலைவர்களை மாநில துரித வளர்ச்சிக்கு ஏற்றவாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் களத்தில் இம்முறை இறக்கி விட்டுள்ளார். இவர்கள் அனைவரும் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் என்பது குறிப்பிட தக்கது.

Pengarang :