SELANGOR

ஜுவாலான் ஏஹ்சான் ரஹ்மா (JER) திட்டம் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு

கோம்பாக், ஜூலை 24: ஜுவாலான் ஏஹ்சான் ரஹ்மா (JER) திட்டத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்க மாநில அரசு உத்தேசித்துள்ளது.

“பெண்கள் வீட்டுக்கு சமையல் பொருட்களை வாங்க வேண்டிய அழுத்தத்தில் உள்ளனர். இந்த திட்டம் மக்களின் சமையலுக்கான அடிப்படை பொருட்களை வாங்கும் பெண்களின் சுமையை

குறைக்க மாநில அரசு எடுத்துவரும் நடவடிக்கை பலருக்கு மன ஆறுதலை அளிக்கும் என நம்புவதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இத்திட்டம் சுங்கை துவா தொகுதியில் 20 முறைக்கு மேல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“மக்களின் சுமையைக் குறைக்க ஆகஸ்ட் முதல் ஒரு வருடம் அல்லது ஆறு மாதங்களுக்கு இந்த திட்டத்தைத் தொடர திட்டமிட்டுள்ளோம்,” என்று தற்போதைய சுங்கை துவா தொகுதியின் நடப்பு உறுப்பினராகவும் இருக்கும் அமிருடின் கூறினார்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும் ஒரு பாக்கெட் இறைச்சி 10.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

பி.கே.பி.எஸ் ஜூலை 15 முதல், பொது மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு கிலோகிராம் எண்ணெய் பாக்கெட்டை RM2 என்ற விலையில் விற்பனை செய்கிறது.

பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.


Pengarang :