MEDIA STATEMENTNATIONAL

  டத்தோஸ்ரீ சலாவுடின் அயோப்பின்  P 161  பூலாய்  நாடாளுமன்ற  இருக்கை காலியானதாக  டேவான் ராக்யாட்  அறிவித்தது

கோலாலம்பூர், ஜூலை 25:  அமைச்சர்பதவியில் இருந்த  பூலாய் நாடாளுமன்ற உறுப்பினர்  டத்தோஸ்ரீ சலாவுடின் அயோப் இறந்ததைத் தொடர்ந்து ஜோகூரில்  புலாய்  தொகுதி காலியாக உள்ளதாக டேவான் ராக்யாட் தேர்தல் ஆணையத்திடம் (EC) அறிவித்தது.

டேவான் ராக்யாட் சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் கூறுகையில், மத்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 54 பிரிவு 1ன் படி, காலியிடத்தை உறுதி செய்த நாளிலிருந்து 60 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் அந்த இடத்தை  நிரப்ப ஆவண செய்ய வேண்டும்.

“டேவான் ராக்யாட்டின் சபாநாயகர் என்ற முறையில், ஜூலை 23, 2023 அன்று டத்தோஸ்ரீ  சலாவுடின் அயோப்   இறந்துவிட்டார் என்று தேர்தல் ஆணையத் தலைவருக்கு இன்று தெரிவிக்க நான் அறிவிப்பை வெளியிட்டேன்” என்று அவர் தெரிவித்தார்.

ஜொஹாரி, நாடாளுமன்றத்தின் சார்பாக,  சலாவுடின் அயோப்   குடும்பத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தார், மேலும் அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்தார்.

சலாவுடின் அயோப்   கெடாவின் அலோர்ஸ்ட்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.23 மணியளவில் மூளையில்   ஏற்பட்ட  ரத்தக் கசிவுக்கான அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது 61 வது  வயதில்  தனது இறுதி மூச்சை விட்டார்.


Pengarang :