ECONOMYEKSKLUSIFPENDIDIKANSELANGOR

சிலாங்கூர்  இடைநிலைப் பள்ளிகளுக்கு TVET ஐ விரிவுபடுத்த விரும்புகிறது, பல திறமையான தொழில் நுட்ப பணியாளர்களை உருவாக்கும்.

ஷா ஆலம், ஜூலை 25: அதிக வருமானம் கொண்ட திறமையான  பணியாளர்களை உருவாக்க சிலாங்கூர் தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி (TVET) திட்டத்தை இடைநிலைப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த விரும்புகிறது.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, வளர்ச்சியடைந்த  நாடுகளால்  எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு  இணங்கவே இந்த எண்ணம் இருப்பதாகவும், இது மாநிலத்தில் முதலீடு செய்வதற்கான அதிக வாய்ப்புகளைத் திறந்து விடுவதாகவும் இருக்கும் என விளக்கினார்.

“டி.வி.இ.டி.யானது எப்போதும் இரண்டாவது வாய்ப்புகளுக்கான பிரதான   மார்க்கமாக கருதப்படுகிறது, ஆனால் வளர்ந்த நாடுகளில்,  இந்த மாணவர்களை இடைநிலைப்பள்ளி மட்டத்திலிருந்து தயார் படுத்துகிறார்கள்.

“பல உற்பத்தித் துறைகளை மேம்படுத்துவதுடன், நாங்கள்  இடைநிலைப் பள்ளிகளில் நுழையத் தொடங்குவதன் வழி , பல  திறமையான  தொழில் நுணுக்கம்  கொண்ட மனித ஆற்றலை  வழங்குவதை நோக்கி நகர முடியும்” என்று அவர் நேற்று இரவு கூறினார்.

இங்கு நடைபெற்ற பொது சந்திப்பு அமர்வில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இத்திட்டத்தில், முதலீடு  மற்றும் நிதி அமைச்சகத்தின் ஊக்கத் தொகைகளும் நாட்டிற்கு முதலீடுகளை  மேலும் ஊக்குவிக்க முடியும் என்பதை ஒப்புக் கொண்டார்.

“முன்னோக்கிச் செல்ல, முதலீடு என்பது வெளிப்படையான தேவைதான், ஆனால் மக்கள் சந்தோஷம்,  ஒருமைப்பாடு போன்ற அம்சங்கள்  கூடுதலான ஒரு முக்கியமான அளவுகோல் அல்லது குறி காட்டியாகும்.

சிலாங்கூரில் நாம் அதை எப்பொழுதும் நினைவுபடுத்துகிறோம், அதை நடைமுறைப்படுத்தவும் தொடங்குகிறோம்.


Pengarang :