MEDIA STATEMENTSELANGOR

சட்டமன்ற உறுப்பினர் அல்லாதவருக்கு சபாநாயகர் பதவி- கருத்திணக்கத்தின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு

ஷா ஆலம், ஜூலை 25- அடுத்த மாதம் நடைபெற இருக்கும் மாநிலத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான்- பாரிசான் நேஷனல் கூட்டணி வென்றால் சபாநாயகர் பதவிக்கு சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவரை நியமிக்கும் முடிவு கருத்திணக்கத்தின் பேரில் எடுக்கப்பட்டதாகும்.

சபாநாயகர் பதவிக்கு சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவரை நியமிப்பது பாரம்பரிய நடைமுறையாக இல்லாத போதிலும் அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பானதல்ல என்று மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சஹாய்ஸான் காயாட், (ஜோகூர் சட்டமன்ற முன்னாள் சபாநாயகர்), டத்தோ வீரா ஓமார் ஜாபர் ( மலாக்கா மாநில முன்னாள் சட்டமன்ற சபாநாயகர்) ஆகிய இருவரும் சட்டமன்ற உறுப்பினர் அல்லாதவர்கள் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

பெர்லிஸ் சட்டமன்றமும் சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவரை சபாநாயகராக கடந்தாண்டு தேர்ந்தெடுத்தது. பாஸ் கட்சி கூட கடந்த 2018 ஆம் ஆணடு சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவரை சபாநாயகராக முன்மொழிந்தது.

சிலாங்கூர் மாநில சட்டமன்ற சபாநாயகராக பந்திங் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லாவ் வேங் சான் தேர்ந்தெடுக்கப் படுவதற்கு நேற்று பரிந்துரைக்கப்பட்டது.

மாநிலத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 29ஆம் தேதி நடைபெறவுள்ள வேளையில் தொடக்க வாக்கெடுப்பு ஆகஸ்ட் 8 ஆம் தேதியும் முழு வாக்களிப்பு ஆகஸ்ட் 12 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.


Pengarang :