SELANGOR

அடிப்படைப் பொருட்களின் மலிவு விற்பனைத் திட்டம் 15 இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும்

ஷா ஆலம், ஜூலை 26: சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகத்தால் (பிகேபிஎஸ்) நடத்தப்படும் அடிப்படைப் பொருட்களின் மலிவான விற்பனைத் திட்டம் ஆகஸ்ட் 1 முதல் ஒரு நாளைக்கு 15 இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

எஹ்சான் ரஹ்மா (JER) விற்பனை இடங்களின் அதிகரிப்பு செகி ஃப்ரெஷ் பல்பொருள் அங்காடியுடனான ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு மேற்கொள்ளப்படும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் முகமட் கைரில் முகமட் ராஸி கூறினார்.

“இத்திட்டத்தை முன்பு நாங்கள் ஒரு நாளைக்கு ஒன்பது இடங்களில் ஏற்பாடு செய்தோம், பின்னர் சமீபத்தில் அதை 12 இடங்களாக அதிகரித்தோம். ஆனால் இன்று புதிய துறையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மூலம் ஆகஸ்ட் 1 முதல் ஒரு நாளைக்கு 15 இடங்களில் எஹ்சான் ரஹ்மா (JER) விற்பனையை நடத்த முடிவு செய்துள்ளோம்.

“செகி ஃப்ரெஷ், சிலாங்கூர் முழுவதும் உள்ள அதன் தேர்ந்தெடுக்கப் பட்ட கடைகளின் இருப்பிடங்களை எஹ்சான் ரஹ்மா (JER) விற்பனையை நடத்துவதற்கு வழங்கும்.

“இத்திட்டம், சிலாங்கூரில் உள்ள மக்களுக்குக், குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு, அடிப்படை பொருட்களை மலிவான விலையில் பெற உதவுவதாகும்” என்று அவர் கூறினார்.

பிகேபிஎஸ் மற்றும் செகி ஃப்ரெஷ் பல்பொருள் அங்காடி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்விற்குப் பிறகு சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த ஆண்டு முதல் சேகரிக்கப்பட்ட RM60 மில்லியனுடன் ஒப்பிடும் போது இந்த விற்பனைக்கான இடங்களை அதிகரித்த பிறகு அதன் மதிப்பு  RM80 மில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என முகமட் கைரில்

“இதன் மூலம் 5 மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும் ஒரு பாக்கெட் இறைச்சி 10.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.


Pengarang :