ECONOMYPENDIDIKANSELANGOR

ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு  73 லட்சம் ரிங்கிட் நிதி- சிலாங்கூர்

செய்தி சு.சுப்பையா
ஷா ஆலம்.ஜூலை.27-  10 ஆண்டு காலத்தில் சிலாங்கூரில் உள்ள வசதி குறைந்த இந்திய  மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக  சிலாங்கூர் மாநில அரசு இது வரையில் 73  லட்சம் ரிங்கிட் கல்வி நிதியாக வழங்கியுள்ளது என்று  மாநில அரசின் அலுவலக வளாகத்தில் உள்ள பொது மண்டபத்தில் 179 இந்திய மாணவர்களுக்கு  கல்வி   நிதி  வழங்கும் நிகழ்ச்சியின் போது மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினரான கணபதி ராவ் வீரமன் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில அரசு இதுவரை  1,817 மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கியுள்ளது. இதில் டிப்ளோமா கல்விக்கு படிக்கும் 156 ஏழை இந்திய மாணவர்களும் அடங்குவர். இந்திய மாணவர்கள் உயர் கல்விக்கு செல்லும் போது கணினி வாங்க கூட வசதியின்றி உதவி கேட்டு வந்தனர்.  இப்படி ஏழை இந்திய மாணவர்களின் கல்வி உயர் கல்வி வறுமையால் கைவிடப்படக் கூடாது என்று முடிவு செய்தேன். 2013ஆம் ஆண்டு முதன் முதலில் 13 மாணவர்களுக்கு 75,700 ரிங்கிட்டுடன் தொடங்கினோம்..
அப்பொழுது  அதற்கென  ஒதுக்கீடு  செய்யவிட்டாலும், பல்வேறு மற்ற  நிகழ்ச்சிகளுக்கு  செய்யும் செலவை குறைத்து கல்வி நிதி வழங்கினோம்..
பின்னர் முறையான ஆய்வு அறிக்கை சமர்பித்து மாநில அரசு அதிகாரபூர்வமாக கல்வி நிதி பெற்று ஏழை இந்திய மாணவர்களுக்கு விடாமல் 10 ஆண்டுகளாக கல்வி உதவி வழங்கி வருகிறேன்.
ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற முறையில் தமிழ்ப்பள்ளிகள், கோவில்கள், இந்திய வியாபாரிகளுக்கு பொருள் உதவி, தோட்டப் புற வசதி குறைந்த இந்திய மாணவர்களுக்கு போக்குவரத்து உதவி நிதி என்று பல்வேறு உதவித் திட்டங்களை நமது ஏழை இந்திய சமுதாய மேம்பாட்டுக்கு செய்துள்ளோம், என்ற ஆத்ம திருப்பி உள்ளது என்றார்.
அடுத்து வரும் மாநில அரசின்  இந்திய ஆட்சிக் குழு உறுப்பினரும் ஏழை இந்திய மாணவர்களின் உயர் கல்விக்கு உதவி நிதி வழங்க வேண்டும். இதன் காரணத்தால் இந்த கல்வி உதவி நிதி வழங்கும் நிகழ்வை மாநில அரசு வளாகத்திலேயே நடத்துகிறேன் என்று மிகுந்த மனப்பூரிப்புடன் கூறினார்.
இந்த வரலாற்று பூர்வ நிகழ்ச்சியில் 179 ஏழை இந்திய மாணவர்களோடு அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சுமார் 500 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Pengarang :