MEDIA STATEMENTNATIONAL

அரசியலைப் பற்றி பேச மாட்டேன் மக்களுக்கு சேவையாற்ற வந்துள்ளேன் – வாய்ப்பு தாருங்கள்

கோலசிலாங்கூர்  ஜூலை 28 ;- கோல சிலாங்கூரில் தேர்தல் பிரச்சாரம் கூட்டம் நேற்று இங்குள்ள அசாம் ஜாவா கிராமத்துத் தலைவர் ஹஜி ராம்லி கடையின் முன்புறம் சிறப்பான முறையில் நடைபெற்றது.இங்கு வசிக்கும் மக்களும் அக்கம் பக்கத்தில் உள்ள பி.கே.ஆர்.ஆதரவாளர்களும் கலந்து கொண்ட இந்தத் தேர்தல் பிரச்சார நிகழ்வில் முதல் அங்கமாகக் கோலசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சூல்கிப்லி அமாட்  உரை நிகழ்த்தினார்.

அங்கு வருகை புரிந்திருந்த அனைவருக்கும்  தனது வணக்கத்தையும்  வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொண்டு,. புக்கிட் மெலாவத்தி  எண் 10 -நம்பருக்கான பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரை  நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று  கேட்டுக்கொண்டார்.

இத்தொகுதி வேட்பாளர்  தீபன் சுப்ரமணியம்  மகத்தான வெற்றி பெறுவதற்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.ஆகவே இத்தொகுதியை நாம் கைப்பற்றுவதை  உறுதிபடுத்த  பாடுபடுவோம் என்று கூறினார்..

அடுத்துப் பி.கே.ஆர்.பொருளாதார அமைச்சர் மதிப்புமிகு ரபீசி அவர்கள் தமது உரையில் முதல் வரியில் இப்பொழுது புதிய அரசாங்கத்தைத் தேர்தெடுக்கப் போகிறோம்.அதுதான் நம்முடைய நோக்கம்.அதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதில் தான் நாம் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

எதிர்க்கட்சியினர் இன்று அரசாங்கத்தை குறை கூறிக் கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால்,  நடப்பு அரசாங்கம் எத்தனையோ திட்டங்களை உருவாக்கி  அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்  குறியாக உள்ளனர்.  அதில் மக்கள்  பயனடைந்து உள்ளனர் என்பது பலருக்கும் தெரியும். ஆகா நாம் காரியமாற்றுபவர்களை தான் தேர்ந்தெடுக்க வேண்டும்

ஆகவே இந்தத் தொகுதியில்  60 – விழுக்காடு மலாய் இனத்தவர்கள் இருக்கிறார்கள். அந்த இனத்தை அல்லாதவர் 40 – விழுக்காடு உள்ளனர். அப்படி இருந்தும் நாங்கள் இந்தியர்களின் பிரதியை இந்தத் தொகுதியில் இறக்கி உள்ளோம். காரணம் மக்களுக்கு  நாடும், மக்களின் சுபிட்சமும் முக்கியம்,  ஒற்றுமையான  தேசத்தினால்  மட்டுமே  முன்னேற்றமடைய முடியும்  அதனால், மக்களின்  ஒற்றுமையின் அளவு கோளாக  இந்தப்  புக்கிட் மெலாவத்தி தொகுதியின்  தேர்தல் முடிவு  இருக்கும் என்று சிறப்பாக பேசி தனது உரையை முடித்தார்.

இறுதியாக இந்தப் புக்கிட் மெலாவத்தி எண்.10 -தில் போட்டியிடும் தீபன் சுப்ரமணியம் பேசுகையில் இங்கு நான் அரசியலைப் பற்றி பேச மாட்டேன்.மக்களுக்கு பயனுள்ள திட்டங்களும்,பொருளாதாரத்தை எப்படி பெருக்கிக்  கொள்ள வேண்டும்.அதை நாம் எப்படிக் கொண்டு வரவேண்டும் என்பதில் தான் நான் குறிக்கோளாக இருக்கின்றேன் என்றார். ஆகவேதான் எனக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்தால் எந்த இனம்  மதம் பாராமல் நான் உங்களுக்குச் சேவை செய்வேன் என்று கூறி முடித்தார் தீபன் சுப்ரமணியம்.

அங்கு உள்ள பி.கே.ஆர் தலைவர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்ட இத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில்  150 -க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Pengarang :