EKSKLUSIFMEDIA STATEMENT

டெங்கில் தொகுதியை சுற்றுலா மையமாக மேம்படுத்த பாரிசான் வேட்பாளர் இலக்கு

ஷா ஆலம், ஜூலை 30- டெங்கில் சட்டமன்றத் தொகுதியை பிரசித்தி பெற்ற சுற்றுலா மையமாக உருவாக்குவது அத்தொகுதியில் பாரிசான் நேஷனல் சார்பில் களமிறங்கியுள்ள வேட்பாளரின் திட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கும் நாட்டின் நிர்வாகத் தலைநகருக்கும் அருகே அமைந்துள்ள காரணத்தால் இத்தொகுதி அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளதாக தொகுதி வேட்பாளரான நோராஸ்லி சைட் கூறினார்.

டெங்கில் பல்வேறு வாய்ப்புகளைக் கொண்ட தொகுதியாக விளங்குகிறது. வட்டார மக்களின் நலனுக்காக இந்த வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் நமக்குதான் பெரும் நஷ்டம் ஏற்படும் என்று அவர் சொன்னார்.

தாம் முதிர்ச்சியான அரசியல் அணுகுமுறையைக் கடைபிடிக்க விரும்புவதாகக் கூறிய நோராஸ்லி, எந்த நன்மையும் தராத சர்ச்சைகளில் நேரத்தை செலவிடுவதை விட மக்களின் நலனுக்கு முன்னுரிமை தர விரும்புவதாக குறிப்பிட்டார்.

தொகுதியிலுள்ள ஏழைகளுக்கு உதவும் நோக்கில் தாம் அரசியலுக்கு வந்ததாக சிப்பாங் அம்னோ தலைவரும் வணிகருமான 45 வயது ரோராஸ்லி தெரிவித்தார்.

நானும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். ஏழைகளின் உணர்வு எனக்கும் தெரியும். ஆகவே, வேலை வாய்ப்பு உள்பட டெங்கில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவிருக்கிறேன் என்றார் அவர்.

 

 


Pengarang :