ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பிரதமர்  அன்வருக்கு இந்திய சமூகம் பிளவுபடாத ஆதரவை வழங்க வேண்டும்- தலைவர்கள் கோரிக்கை

கோலாலம்பூர், ஆக 2- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்திற்கு இந்திய சமூகம் பிளவுபடாத ஆதரவை வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒற்றுமை அரசாங்கம் தான் இந்திய சமுதாயத்திற்கான எதிர்காலம் என்று சிலாங்கூர் இந்திய ஆலோசக  மன்றத்தைச் சேர்ந்த சார்லஸ் சாந்தியாகோ, டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் ஆகியோர் கூறினர்.

ஆறு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் பட்சத்தில் இந்திய சமுதாயத்தை ஒன்றிணைக்கும் நோக்கில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று இங்குள்ள சிலாங்கூர் கிளப்பில் நடைபெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள், வணிகர்கள், சமூகத் தலைவர்கள், கல்வியாளர்களுடனான சந்திப்பின்போது அவர்கள் இதனைக் கூறினர்.

இச்சந்திப்பில் 50க்கும் மேற்பட்ட இந்தியத்  தலைவர்கள் பங்கு கொண்டனர். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் மடாணி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது  இச்சந்திப்பின் பிரதான நோக்கமாகும்.

மலேசியாவில் உள்ள இந்திய சமூகம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. அவை உடனடி கவனம் செலுத்தப் படுவதுடன் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வேலையில்லாத் திண்டாட்டம், உயர்கல்வி வாய்ப்பு, வறுமை, இந்திய இளைஞர்களின் எதிர்காலம் உட்பட பல விவகாரங்கள் இதில் அடங்கும்.

மேலும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி  மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க மைல் கல்லாக அமையவுள்ளது. மிட்லண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் வரும் 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை பல்வேறு துறைகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஒன்றிணைய உள்ளனர்.

பிரதமரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு முழு ஆதரவு வழங்குவதுடன் இந்திய சமுதாயத்தின் கோரிக்கைகளும் முன் வைக்கப் படவுள்ளது. இந்த ஒன்றுகூடல் நமது சமூகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் முன்னேற்றத்திற்கான சக்திவாய்ந்த அர்ப்பணிப்பை அடையாளப்படுத்தும் என்று  அவர்கள் கூறினர்.


Pengarang :