EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

ராக்கான் மூடா திட்டத்தில் 80,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு

பெட்டாலிங் ஜெயா, ஆக19-  இவ்வாண்டு ஜூன் மாதம் மீண்டும் புத்துயிரூட்ட பட்ட  ரக்கான் மூடா திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் ஊக்கமூட்டும் ஆதரவு கிடைத்து வருகிறது.

இத்திட்டத்தில் இதுவரை 15 முதல் 30 வயதுக்குட்பட்ட 80,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ கூறினார்.

 இளைஞர் மற்றும் விளையாட்டு   அமைச்சின்  https://www.kbs.gov.my/rakamuda.html   என்ற அகப்பக்கம் மூலம் அல்லது  [email protected] . என்ற மின்னஞ்சல் வாயிலாக பதிவு செய்து  ரக்கான் மூடா திட்டத்தில் பங்கேற்குமாறு  இளைஞர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

கடந்த காலத்தில், ராக்கான் மூடா திட்டம் பள்ளி அளவில் மட்டுமே இருந்தது  ஆனால் இப்போது நாங்கள் அதை 15 முதல் 30 வயதுடையவர்களுக்கு அதாவது பள்ளிக்கு வெளியில் உள்ளவர்களுக்கும் திறந்துள்ளோம் என்று அவர் சொன்னார்.

இன்று நான் சிலாங்கூர் மாநிலத்தில் ராக்கான் மூடா தொடக்க நிகழ்வுக்கு வந்தேன். அவர்கள் பெட்டாலிங் ஜெயா ரக்கான் மூடா வளாகத்தை  மையமாகக்  கொண்டு  இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர் என்றார் அவர்.

இன்று இங்கு  நடந்த சிலாங்கூர் மாநில  அளவிலான மினி  ராக்கான் மூடா நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ரக்கான் மூடா திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஜூன் 25 ஆம் தேதி மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் தொடக்கி வைத்தார்.


Pengarang :