EKSKLUSIF -MEDIA STATEMENT

மந்திரி புசாராக மீண்டும் அமிருடின்  ஷாரி வேண்டும்  இந்திய தலைவர்கள் அறைக்கூவல்

செய்தி .சு. சுப்பையா.

சுங்கை பூலோ. ஆகஸ்ட்.19- சிலாங்கூர் மாநிலத்தை கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக வழி நடத்தி வந்த டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியே வர வேண்டும் என சிலாங்கூரில் உள்ள பல இந்திய சமுதாய தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

கோல லங்காட் நகராண்மை கழக உறுப்பினர் பன்னீர் செல்வம் மீண்டும் டத்தோ ஸ்ரீ அமிருடின் மந்திரி புசாராக வர வேண்டும். அவர் வந்தால் தான் அவரால் கொண்டு வரப் பட்ட பல நல்ல திட்டங்கள் வெற்றி அடையும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதே போல் டமன்சாரா நாடாளுமன்ற தொகுதியில் இந்திய சமுதாய தலைவராக புக்கிட் லஞ்சான் சட்டமன்ற தொகுதியில் சேவையாற்றி வரும் லோகநாதனும் டத்தோ ஸ்ரீ அமிருடின் , மந்திரி புசாராக வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அவரது பல திட்டங்கள் முறையாக சிலாங்கூர் மக்களுக்கு கொண்டு போய் சேர அடுத்த இரண்டு ஆண்டுகளில் போய் சேரும். இதன் வழி சிலாங்கூர் மாநில மக்கள் பயன் அடைவார்கள். இதன் வழி அடுத்த மாநிலத் தேர்தலில் அதிகமான தொகுதிகளை ஒற்றுமை அரசு வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என்று அவர் தெரிவித்தார்.

கோல சிலாங்கூர் தொகுதியை சேர்ந்த ஜெரம் சட்டமன்ற தொகுதியின்  இந்திய சமுதாய தலைவரான மணிவண்ணனும் டத்தோ ஸ்ரீ அமிருடின் மாநில மந்திரி புசாராக மீண்டும் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தேர்தல் காலத்தில் கோல்பீல்ட்ஸ் தோட்ட தமிழ் பள்ளிக்கு திடீர் வருகை தந்து அசத்தினார். இப்பள்ளியில் நிலவும் திடல் பிரச்சனை, துணைக் கட்டிடம் ஆகிய பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண்பேன் என்று வாக்குறுதி கொடுத்து சென்றார். அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மந்திரி புசார் வர வேண்டும்.

மேலும் கடந்த 5 ஆண்டுகளாக சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக்காக அயராது உழைத்தவர். அவரது சேவை தொடர வேண்டும். மாநில மக்கள் பயன் அடைய வேண்டும். சிலாங்கூர் மாநிலம் எல்லாத் துறையிலும் துரித மேம்பாடு அடைய வேண்டும் என மணிவண்ணன் கேட்டுக் கொண்டார்.

ஷா ஆலம் மாநகர மன்றத்தின் முன்னாள் உறுப்பினரான குமரவேலும் டத்தோ அமிருடின் மந்திரி புசாராக வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இளமையும் துடிப்பும் ஒருங்கே கொண்ட டத்தோ அமிருடின் தலைமையில் சிலாங்கூர் மாநிலம் எல்லாத் துறையிலும் வெற்றி நடை போட டத்தோ ஸ்ரீ அமிருடின் மாநில மந்திரி புசாராக வரவேண்டும்  என்று குமரவேல் கேட்டுக் கொண்டார்


Pengarang :