KOTA KINABALU, 26 Sept — Para petugas Suruhanjaya Pilihan Raya tiba membawa peti undi ke Pusat Penjumlahan Rasmi Undi Pilihan Raya Dewan Undangan Negeri Sabah Kawasan Moyog Penampang di Dewan Kebudayaan Penampang hari ini. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA KOTA KINABALU, Sept 26 — Election Commission staff arrived to bring the ballot box to the Official Counting Center of the Sabah State Legislative Assembly in the Penampang Moyog Area at the Penampang Cultural Hall today. –fotoBERNAMA (2020) COPYRIGHTS RESERVED
EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

சிம்பாங் ஜெரம், பூலாய் இடைத்தேர்தல்களில்  இளம் வாக்காளர்களின் மன ஒட்டும் அறிய சோதனை களம்.

 ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 26:  இன்று  முதல்  அதிகாரபூர்வமாக  பிரச்சாரத்தை  தொடங்கும்  வேட்பாளர்கள்   பெரிய எண்ணிக்கையிலான  வாக்காளர்களை சந்திக்க வேண்டியுள்ளது.  செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் பூலாய் நாடாளுமன்றம் மற்றும் சிம்பாங் ஜெராம் மாநில சட்டமன்ற இடைத்தேர்தல்களில் ,  அதிக  இளம் வாக்காளர்களை கொண்ட தொகுதிகளில் ஒன்றாக கருதப்படும்  இந்நொகுதியின் முடிவுகள் , தேசிய மற்றும் மாநிலங்களின் தலைவிதியை  அல்லது அரசாங்கத்தின் நிலையை   மாற்றி விடாது  என்ற போதிலும்  இளம் வாக்காளர்களின் மன ஒட்டும் எப்படி உள்ளது  என்பதற்கான ஒரு சோதனை களமாக பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

தேர்தல் ஆணையத்தின் (SPR) வாக்காளர் பதிவேட்டில் அடிப்படையில், பூலாய் நாடாளுமன்றம் 165,799 வழக்கமான வாக்காளர்களுடன்  மொத்தம் 166,653 வாக்காளர்களைக் கொண்டுள்ளது; அதில் 927 போலீஸ் மற்றும் மனைவிகள் மற்றும் வெளிநாட்டு வாக்காளர்கள் (PTH) 26 பேரும் அடங்குவர்.

பூலாய் பாராளுமன்றத்தில் உள்ள வாக்காளர்களின் மிகப்பெரிய குழு 21 முதல் 29 வயது வரையிலான வயது வரம்பை உள்ளடக்கியது, இது மொத்த வாக்காளர்களில் 21.05 சதவீதம் அல்லது 35,074 பேர்; 30 முதல் 39 வயது வரையிலான 34,235 வாக்காளர்கள் (20.5 சதவீதம்), 40 முதல் 49 வயதுடையவர்கள் 32,271 பேர் (19.3 சதவீதம்) பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், சிம்பாங் ஜெராம் மாநில சட்டசபைக்கு,  40,373 சாதாரண வாக்காளர்கள் மற்றும்  வெளிநாட்டில் இருந்து வர இயலாத ர ஆறு வாக்காளர்கள் அடங்கிய 40,379 வாக்காளர்களை உள்ளடக்கியது.

DUN சிம்பாங் ஜெரமில் உள்ள வாக்காளர்களின் மிகப்பெரிய குழு 30 முதல் 39 வயது வரையிலான வயது வரம்பை உள்ளடக்கியது, இது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 23.1 சதவீதம் அல்லது 9,326 பேர், அதைத் தொடர்ந்து 9,160 வாக்காளர்கள் (22.6 சதவீதம்) 21 முதல் 29 வயது வரை, 40 முதல் 49 வயது வரையிலான பிரிவில் 7,113 பேர் (17.6 சதவீதம்) பதிவாகியுள்ளது.

தேர்தல் பிரச்சாரம் இன்று தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி 11.59 வரை 14 நாட்கள் பிரச்சார காலத்தை நிர்ணயித்துள்ளது, செப்டம்பர் 5 ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிப்பு மற்றும் செப்டம்பர் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது.  ஓரு  தொழிலதிபரான  எஸ்.ஜெகநாதன். சுயேச்சை வேட்பாளர் இடைத்தேர்தலில் யானை சின்னத்தை பயன்படுத்துவார்.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவுத் துறை அமைச்சராக இருந்த மறைந்த டத்தோஸ்ரீ சலாவுதீன் அயூப் கடந்த ஜூலை 23ஆம் தேதி இறந்ததைத் தொடர்ந்து இரண்டு இடைத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

அமானாவின் துணைத் தலைவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேர்தலிலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 15வது பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்ற பிறகு இரண்டாவது முறையாக இரண்டு இடங்களையும் தற்காத்து வந்தார்.


Pengarang :