ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோத்தா அங்கிரிக் தொகுதி ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு தேசியக் கொடிகள் விநியோகம்

ஷா ஆலம், ஆக 27 – இம்மாதம் 31ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட இருக்கும் நாட்டின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோத்தா அங்கிரிக் தொகுதி 300 குடியிருப்பாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு  ஜாலுர் கெமிலாங் எனப்படும் தேசியக் கொடிகளை விநியோகிக்கவுள்ளது.

இந்த கொடிகளின் விநியோகம் இலவசமாக மேற்கொள்ளப்படும் என்றும்  ஷா ஆலம் செக்சன் 6 நவீன சந்தை மற்றும் செக்சன் 2 உணவு வளாகத்தில் உள்ள வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்றும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

 மக்களிடையே நாட்டுப்பற்று உணர்வைத் தூண்டும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவை நேசிக்கும் பல இன மக்கள் மத்தியில் நிலவும் ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் வாகனங்களில் தேசியக் கொடிகளை பறக்க விடுவதற்கான  முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன என்று மாநில ஆட்சி குழு  உறுப்பினருமான நஜ்வான் நேற்று சிலாங்கூர் கினிக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்தார் .

தேசிய தின கொண்டாட்டங்களுக்கு மேலும் மெருகூட்டும் வகையில்  புக்கிட் ஜெலுத்தோங்கில் உள்ள பெட்ரோனாஸ் எரிவாயு நிலையத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு தேசியக் கொடிகளை தாங்கள் விநியோகிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.


Pengarang :