ECONOMYMEDIA STATEMENTNATIONAL

முற்போக்கு ஊதிய முறை அமலாக்கத்தின்  போது வெ.1,500 குறைந்தபட்ச ஊதியம் நிலை நிறுத்தப்படும்!  அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

கூச்சிங் ஆக 27-அடுத்த ஆண்டு முற்போக்கான ஊதிய முறை அறிமுகப்படுத்தப் படும்போது குறைந்தபட்ச ஊதியம் வெ.1,500  நிலைநிறுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் வ. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

முற்போக்கான ஊதிய முறையானது குறைந்தபட்ச ஊதியத்துடன் இணைந்து நடை முறைப் படுத்தப்படும் என்றும் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலம் முதலாளிகளும் பயனடைவார்கள் என்றும் சரவாக் கூச்சிங்கில் பெர்னாமாவுக்கு  அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

தொழிலாளர்கள், அதிகாரிகள், முதலாளிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பயிற்சி வழங்குநர்கள் கலந்து கொண்ட  தொழில் துறை மாநாட்டை மனிதவள அமைச்சர் சிவகுமார் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

முற்போக்கான ஊதிய முறையானது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப படிப்படியான மற்றும் கட்ட ஊதிய

உயர்வுகளை வழங்கும். அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் முற்போக்கான ஊதிய முறை செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து தனியார் முதலாளிகளுக்கும் முற்போக்கான ஊதிய முறை கட்டாயமில்லை என்று தேசிய பொருளாதார நடவடிக்கை கவுன்சில் நிபந்தனை விதித்துள்ளதாக சிவக்குமார் கூறினார்.

திறமையான தொழிலாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,

எதிர் காலத்தில் முற்போக்கான ஊதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை முதலாளிகள் படிப்படியாக உணருவார்கள்.

எனவே, ஆரம்பக்கட்டத்திலிருந்து, முற்போக்கான ஊதிய முறையைப் பயன்படுத்த வேண்டுமா இல்லையா என்பதை முதலாளிகள் முடிவு செய்ய அனுமதிக்கிறோம்.

மக்களுக்கு எது நல்லது என்பதைப் பரிசீலிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தப் பிரேரணை  இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிப்போம்,” என்றார் அவர்


Pengarang :