ANTARABANGSAMEDIA STATEMENT

தாய்லாந்து, பட்டாணியில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்- நால்வர் பலி, 9 பேர் காயம்

பட்டாணி, ஆக 30 – தென் தாய்லாந்தின் பட்டாணியில் உள்ள யாராங் என்ற இடத்தில் நடத்தப்பட்ட  தாக்குதலில் 4 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதோடு மூன்று வயது குழந்தை உட்பட 9 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி  இரவு 10.50 மணியளவில் நிகழ்ந்தது. யாராங் நகரசபையின் அலுவலகப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பாதுகாப்பு தன்னார்வலர்கள் அடங்கிய  குழுவினர் ரோந்துப் பணியில்  ஈடுபட்டிருந்த போது இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

சாலையோரம் மறைந்திருந்த ஆயுதம் ஏந்திய கும்பலைச் சேர்ந்தவர்கள்  போலீஸ் பிக் அப் டிரக் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த பாதுகாப்புக் படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் யாராங் காவல்துறைத் தலைவர் கர்னல் சோம்ப்ராச் கன்கனோன் கூறினார்.

இந்தச் சம்பவத்தில் நாட்டு  வெடிகுண்டு வெடிக்கப்பட்டது. இதில் எட்டு பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பட்டாணி மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்த 2 போலீஸ்காரர்கள் மற்றும் இரண்டு தன்னார்வலர்கள் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.


Pengarang :