ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் முன்னாள் முஃப்தி பெயரிலான முதலீட்டு விளம்பரம் போலியானது- போலீஸ் விளக்கம்

ஷா ஆலம், செப் 4 – சிலாங்கூர் முன்னாள் முஃப்தி டத்தோ முகமது தம்யேஸ் அப்துல் வாஹிட்டின் பெயர் இடம்பெற்றுள்ள முதலீட்டு விளம்பரம் போலியானது என்பதை சிலாங்கூர் காவல்துறை உறுதி செய்துள்ளது.

இந்த விளம்பரம் குறித்து தாம்யேஸ் நேற்றிரவு 9.43 மணியளவில் காவல்துறையில் புகார் அளித்ததாக மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் கூறினார்.

“முதலீட்டாளர் நகரம்’ என்ற பெயரில் முகநூல்  கணக்கில் காட்டப்பட்ட  விளம்பரத்தில் தமக்கு தொடர்புள்ளதை தம்யேஸ்  மறுத்தார்.

இந்த விளம்பரம் போலியானது மற்றும் தம்யேஸூக்கு எந்த தொடர்பும் இல்லை. இதன் தொடர்பான முழுமையான விசாரணைக்காக மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திற்கு அந்தப் புகார் அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பிரபல நபர்களின் அடையாளங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் செய்யப்படும் விளம்பரங்களை நம்பி  ஏமாற  வேண்டாம் என்று ஹுசேன் பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.


Pengarang :