ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பயன்மிக்க அமெரிக்கப் பயணம்-  பிரதமர் அன்வார் வர்ணனை

நியூயார்க், செப் 24 –  அமெரிக்காவுக்கான தனது நான்கு நாள் பயணம் உலகப் பிரச்சனைகளில் மலேசியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து அனைத்துலக அரங்கில் நாட்டின் மதிப்பை உயர்த்துவதற்கு உதவியுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அனைத்துலக உறவுகள் தொடர்பான நாட்டின் கொள்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பகிர்ந்து கொள்ளவும் இந்த பயணம் தனக்கு வாய்ப்பினை வழங்கியுள்ளது  என்று அவர் சொன்னார்.

உண்மையில் இப்பயணம் தொடர்பான முடிவுகள் நன்றாக உள்ளன. நமது அனைத்துலக  நிலைப்பாடுகளை  மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியது  எனது சகாக்களுடனான சந்திப்புகளின் போது உலகளாவிய பிரச்சனைகள் மற்றும் பரஸ்பர நலன்கள் மற்றும்   அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும்  வாய்ப்பு கிடைத்தது என்று அன்வார் மேலும் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 78வது பொதுப் பேரவையில் பங்கேற்பதற்காக   நியுயார்க் சென்றுள்ள பிரதமர், மாநாட்டின் இறுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது  இவ்வாறு தெரிவித்தார்.

ஐ.நா. பொதுப் பேரவையின் இடைவேளையின் போது பல நாட்டுத் தலைவர்களைச் சந்திப்பதற்கான  கோரிக்கைகள் எழுந்ததாகவும்  நேரமின்மை காரணமாக அவர்களுடன் சந்திப்பு நடத்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

உக்ரேன்-ரஷ்யா மோதல், இஸ்லாமோஃபோபியா, பருவநிலை மாற்றம் மற்றும் மியான்மார்  பிரச்சனைகள் போன்ற சர்வதேச விவகாரங்கள்  முன்னிலைப்படுத்த மலேசியாவுக்கு இந்த பயணம் வாய்ப்பளித்ததாக நிதியமைச்சருமான அன்வார் கூறினார்.

நியுயார்க்கில் இருந்தபோது ​​ துருக்கி, ஈராக், தாய்லாந்து, இலங்கை மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தும் வாய்ப்பு தமக்கு கிடைத்ததாவும் அவர் சொன்னார்

அதே நேரத்தில், பல அமெரிக்க நிறுவனங்களுடன் சந்திப்புகள் மூலம் மலேசியாவுக்கு அதிக முதலீடு மற்றும் வர்த்தகத்தை ஈர்ப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து பலனளித்தது என்றார் அவர்.


Pengarang :