NATIONAL

ஜெராக் இடைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கும்

கோலாலம்பூர், செப் 25- சரவா மாநிலத்தின் ஜெராக் தொகுதிக்கான இடைத்
தேர்தல் சம்பந்தப்பட்ட முக்கியத் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று
அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடைத்தேர்தல் தொடர்பில் இங்குள்ள புத்ரா ஜெயா இ.சி.டவரில்
இன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் சிறப்புக் கூட்டத்திற்கு தேர்தல்
ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி சாலே
தலைமையேற்கிறார்.

இந்த கூட்டத்திற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களைச்
சந்திக்கவிருக்கிறார். தேர்தல் மனு, வேட்பு மனுத் தாக்கல், வாக்களிப்பு
தினம் மற்றும் இத்தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள வாக்காளர் பட்டியல்
குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளன.

ஜெபாக் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ தலிப் ஜூல்பிலிப் இம்மாதம் 15ம்
தேதி காலமானதைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானது. அந்த
தொகுதி காலியானது தொடர்பான தகவலை மாநில சட்டமன்ற சபாநாயகர்
டான்ஸ்ரீ முகமது அஸ்பியா அவாங் நாசீரிடமிருந்து தாங்கள் கடந்த
செவ்வாய்க்கிழமை தகவலைப் பெற்றதாக தேர்தல் ஆணையம்
கூறியிருந்தது.

சிறுநீரக பாதிப்பை எதிர்நோக்கியிருந்த 72 வயதான தாலிப் கடந்த 14ஆம்
தேதி மாலை 5.50 மணியளவில் தனியார் மருத்துவமனை ஒன்றில்
காலமானார்.


Pengarang :