NATIONAL

மூன்று மாநிலங்களில் வெள்ளம்- இன்று காலை வரை 274 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

கோலாலம்பூர், செப் 25- பேராக், சபா மற்றும் சரவாக் ஆகிய
மாநிலங்களில் இன்று காலை 9.00 மணி நிலவரப்படி 274 பேர் தற்காலிக
நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

பேராக் மாநிலத்தின் கிரியான் மாவட்டத்திலுள்ள கம்போங் மாத்தாங்
தெங்காவைச் சேர்ந்த ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் சங்காட்
லோபாக் தேசிய ஆரம்பப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில
பேரிடர் மேலாண்மை செயல்குழுவின் செயலகம் தெரிவித்தது.

வெள்ள நீர் முழுமையாக வடியாத காரணத்தால் பாகான் செராய்-சங்காட்
லோபாக் சாலை வாகன போக்குவரத்துக்கு இன்னும் மூடப்பட்டுள்ளதாக
அது கூறியது.

சபா மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து பெய்து
வரும் மழை காரணமாக 70 குடும்பங்களைச் சேர்ந்த 224 பேர் செலாங்கூன்
மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்தில்
தங்கியுள்ளனர்.

இதனிடையே, சரவா மாநிலத்தின் பூலோ பாலுய் சமூக மண்டபத்தில்
நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.


Pengarang :