NATIONAL

மூன்று இலங்கையர்கள் படுகொலை – இரு ஆடவர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

கோலாலம்பூர், செப் 26- செந்தூலில் உள்ள கடை வீடொன்றில் கடந்த
சனிக்கிழமை மூன்று இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட
சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் இன்னும்
கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் பதுங்கியிருக்கக்கூடும் என காவல்
துறையினர் சந்தேகிக்கின்றனர்.

அவ்விருவரும் சம்பவ இடத்திற்கு அருகில் இன்னும் பதுங்கியிருக்கக்
கூடும் எனத் தாங்கள் சந்தேகிப்பதோடு அவர்களைத் தேடும் பணியை
தீவிரப்படுத்தியுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ
அலாவுடின் அப்துல் மஜிட் கூறினார்.

இந்த வழக்கிற்கு விரைவில் தீர்வு காணப்படும் என நாங்கள் நம்புகிறோம்.
இந்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட நபர் ஒருவரின் தந்தை
மற்றும் தாயிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்துள்ளோம் என்று
நேற்று இங்குள்ள கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற
செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

இந்த கொலைச் சம்பவத்திற்கும் இலங்கையில் நிகழ்ந்த இனப்
பிரச்சனைக்கும் தொடர்புள்ள சாத்தியத்தையும் டத்தோ அலாவுடின்
நிராகரித்தார்.

தலைநகர் ஜாலான் பெர்ஹெந்தியான், கம்போங் கோவில் ஹிலிரில் உள்ள
ஒரு வீட்டின் பொருள் வைக்கும் அறையில் மூன்று ஆடவர்களின்
உடல்கள் ஒன்றின் மீது ஒன்றாக குவித்து வைக்கப்பட்டிருந்தது கண்டு
பிடிக்கப்பட்டது. அவர்களின் கைகள் கட்டப்பட்டிருந்ததோடு முகம்
பிளாஸ்டிக் பையினால் மூடப்பட்டிருந்தது.

கொல்லப்பட்ட ஆடவர்களில் இருவர் அந்த இலங்கை தம்பதியர்
வாடகைக்கு எடுத்திருந்த அந்த வீட்டின் அறையில் தங்கியிருந்தனர். இந்த

சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றொரு நபர் அந்த தம்பதியரின்
மகனானவார்.


Pengarang :