NATIONAL

சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தார்

கோலாலம்பூர், அக். 2 – இரண்டு வாரங்களுக்கு முன் வாங்சா மாஜூவில் உள்ள வீடு ஒன்றில் மூன்று வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அச்சம்பவம் தொடர்பாகக் குழந்தை பராமரிப்பாளரான சித்தி ஐனா நோர்னிசா முகமட் சையத் (25)  மீது சிறுமியை அலட்சியப் படுத்தியதாகச் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் பட்டது ஆனால், அவர் அதை மறுத்துள்ளார்.

செப்டம்பர் 20 அன்று, காலை 11 மணியிலிருந்து 11.20க்குள் லோஜிங் ஹைட், வாங்சா மாஜூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அச்சிறுமி நீரில் மூழ்கி இறந்தார்.

குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a) இன் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் RM50,000 அபராதம் அல்லது அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

ரிங்கிட் 5,000 உத்தரவாதத்துடன், நீதிபதி ஹமிடா மொஹமட் டெர்ரி

அப்பெண்ணுக்கு ஜாமீன் அளித்தார்

வழக்கறிஞர் முஹமட் இர்ஸ்யாத் முகமட் ஹாசன் அவர்கள், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அப்பெண் ஒரு வயது குழந்தை உட்பட, உடல் நலம் சரியில்லாதப் பெற்றோரை கவனித்து வருகிறார் எனக் குறிப்பிட்டார். அதன் விளைவாக ஜாமீன் ரிங்கிட் 10,000யிலிருந்து என 5,000ஆக குறைக்கப்பட்டது.

– பெர்னாமா


Pengarang :