NATIONAL

நான்கு பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீட்டின் (API) அளவீடு பதிவு

ஷா ஆலம், அக் 3: இன்று காலை 8 மணி நிலவரப்படி நான்கு பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) அளவீடுகள் பதிவாகியுள்ளன.

அவ்விடங்கள் நீலாய் (155), செரஸ் (153), சிரம்பான் (144) மற்றும் பந்திங் (111) என மலேசிய காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பு (APIMS) இணையதளம் மூலம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், காற்று மாசுக் குறியீடு பெட்டாலிங் ஜெயா (99), ஷா ஆலம் (97), பத்து மூடா, கோலாலம்பூர் (91) மற்றும் புத்ராஜெயா (90) ஆகிய இடங்களில் குறைவான அளவிலேயே பதிவு செய்யப்பட்டன.

0 முதல் 50 வரையிலான IPU அளவீடுகள் நல்லது, 51 முதல் 100 மிதமானது, 101 முதல் 200 ஆரோக்கியமற்றது, 201 முதல் 300 மிகவும் ஆரோக்கியமற்றது என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் 300 மற்றும் அதற்கு மேற்பட்டவை ஆபத்தானவை ஆகும்.

சமீபத்திய காற்று மாசுக் குறியீட்டின் (API) அளவீட்டின் நிலையை அறிய மக்கள் APIMS இணையதளத்தைப் பார்வையிடலாம்.

கடந்த மே மாதம், வானிலை மற்றும் காலநிலை அதிகாரிகள், இந்த ஆண்டு ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் தெற்கு ஆசியான் பிராந்தியத்தில் மிகவும் கடுமையான முகைமூட்டம் நிகழும் என எச்சரித்தனர்.


Pengarang :