ECONOMYNATIONAL

12 வது மலேசிய திட்டம்- 150  கோடி வெள்ளி மானியம்  கோருகிறது காவல்துறை

பெண்டாங், அக் 8- அரச மலேசிய காவல் துறையின் கீழ் 81 திட்டங்களை அமல்படுத்துவதற்கு 12வது மலேசியா திட்டத்தின்  நான்காவது சுழல் முன்னெடுப்பின் கீழ் 510 கோடி வெள்ளி நிதி  ஒதுக்கீட்டை அந்த பாதுகாப்புப் படை கோருகிறது. இந்த ஒதுக்கீட்டில் நாடு முழுவதும் உள்ள மாவட்ட போலீஸ் தலைமையக மற்றும் மாநில போலீஸ்  தலைமையக நிலையில்  21 திட்டங்களும்  படகுகள் மற்றும் பிற வாகனங்கள் போன்ற சொத்துக்களை உள்ளடக்கிய 60 திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ  ரஸாருடின் ஹூசேன் கூறினார்.

இவை தவிர, அனைத்து தகவல் தொடர்பு அமைப்புகள், தொழில்நுட்பம் (உபகரணங்கள்) மற்றும் குடியிருப்பு பழுது பார்ப்புகளையும்  இந்த நிதி ஒதுக்கீடு உள்ளடக்கியுள்ளது.  இதன் தொடர்பான ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்துள்ளோம் என்று அவர் சொன்னார். நேற்று, பெலாங்கை மாநில இடைத்தேர்தலை முன்னிட்டு  பெந்தோங்கில் உள்ள காராக் காவல் நிலைய தலைமையகத்திற்கு  வருகை புரிந்த போது ரஸாருடின் இவ்வாறு கூறினார்.


Pengarang :