SELANGOR

ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் இன்று மேலும் மூன்று இடங்களில் தொடரும்

ஷா ஆலம், அக் 12:  அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப்
பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான்
ரஹ்மா திட்டம் மேலும் இன்று மூன்று இடங்களில் காலை 10
மணிக்குத் தொடரும்.

இன்று மஸ்ஜிட் டிராஜா சுல்தான் அலாயிடின் கம்போங் பண்டார்
(மோரிப்), ஹையாடா பாராட் லாயோட் கோலா சிலாங்கூர் மற்றும்
டேவான் தாமான் ஶ்ரீ ஜெயா வளாகம் (லெம்பா ஜெயா) ஆகிய
இடங்களில் விற்பனை நடைபெறும்.

ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த 2,850
இடங்களில் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தால் (PKPS)
நடத்தப்பட்ட இந்த மலிவு விற்பனையைச் செயல்படுத்த சிலாங்கூர்
RM40 மில்லியன் மானியம் செலவிட்டது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும்
மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை
ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00
வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5
கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

 

பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற
இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி
அறிந்து கொள்ளலாம்.


Pengarang :