NATIONAL

சர்வதேச மலேசிய பாஸ்போர்ட்டை பொய்யான அடையாளங்களைக் கொண்டு விண்ணப்பித்த கணவன்-மனைவி தடுத்துவைப்பு

ஜொகூர் பாரு, அக் 11: நேற்று,கூலாயில் மலேசிய சர்வதேச பாஸ்போர்ட்டை (பிஎம்ஏ) பொய்யான அடையாளங்களை கொண்டு விண்ணப்பித்த கணவன்-மனைவியின் முயற்சியை மலேசிய ஜொகூர் குடிவரவுத் துறை முறியடித்தது.

இலங்கை சிறுவன் ஒருவனுக்கு சர்வதேச மலேசிய பாஸ்போர்ட் விண்ணப்பிக்க உள்ளூர் தம்பதியினர் தங்கள் குழந்தையின் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி, இன்னும் தலைமறைவாக உள்ள ஒருவரிடமிருந்து குறிப்பிட்ட தொகையைப் பெற்றதாக அதிகாரிகள் கண்டறிந்தனர் என மலேசியக் குடிவரவுத் துறையின் இயக்குனர் ஜொகூர் பஹாருடின் தாஹிர் கூறினார்.

காலை 10 மணியளவில் மலேசியக் குடிவரவுத் துறை கூலாய் கிளை அலுவலகத்தில் நடந்த சம்பவத்தில், வெளிநாட்டைச் சேர்ந்த சிறுவன் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தவறியதால், பணியில் இருந்த அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.

மேலும் ஆய்வு செய்ததில், சிறுவன் கூறியப்படி பள்ளிக்குச் செல்லவில்லை என்றும், மலாய் மொழி பேச முடியாது என்றும், ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தது தெரியவந்தது.

எனவே, பாஸ்போர்ட் சட்டம் 1966 பிரிவு 12 (A) இன் கீழ் மேலும் விசாரணைக்காகச் சம்பந்தப்பட்ட தம்பதியினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

குடியேற்ற விவகாரங்களை மேற்கொள்ள மலேசியக் குடிவரவுத் துறை  எந்த ஒரு முகவரையோ அல்லது பிரதிநிதியையோ நியமிக்கவில்லை என்றும், தனிப்பட்ட ஆவணங்களை விற்பதன் மூலம் லாபகரமான வருமானம் கிடைக்கும் என்ற இனிய வாக்குறுதிகளால் ஏமாற வேண்டாம் அல்லது கடுமையான தண்டனையை எதிர்கொள்ள வேண்டாம் என்றும் பொதுமக்களை வலியுறுத்துவதாகப் பஹாருடின் கூறினார்.

“தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியில் சட்ட விரோதச் செயல்கள் நடந்தால் தகவல் அளிக்க முன்வருமாறு பொதுமக்களை மலேசியக் குடிவரவுத் துறை கேட்டுக்கொள்கிறது,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :