NATIONAL

பெரும்பாலான பகுதிகளுக்கு முழுமையான நீர் விநியோகம் கிடைத்ததுள்ளது

ஷா ஆலம், அக் 12: துர்நாற்றம் மாசுபாடு காரணமாகச் சுங்கை
சிலாங்கூரில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்ட பெரும்பாலான
பகுதிகளுக்கு நேற்று மாலை 6 மணி நிலவரப்படி முழு விநியோகம்
கிடைத்தது.

ஷா ஆலம், கோம்பாக், கோலாலம்பூர், உலு சிலாங்கூர் மற்றும்
கோலா சிலாங்கூர் ஆகிய ஐந்து பிராந்தியங்கள் முழுமையாக நீர்
விநியோகம் கிடைத்தது. அதே நேரத்தில் பெட்டாலிங்கில் 98.9 சதவீத
விநியோகமும், கிள்ளான் 94.2 சதவீதமும் கிடைத்ததுள்ளது
குறிப்பிடத்தக்கது.

"நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர்
வழங்கல் மறுசீரமைப்பு நிலை 99.1 சதவீதத்தை எட்டியது.

"அக்டோபர் 12 நள்ளிரவு 12 மணிக்கு நீர் விநியோகம் முழுமையாகச்
சீரமைக்கப்படும்" என்று பெங்குருசன் ஆயர் சிலாங்கூர்
தெரிவித்துள்ளது.

இன்னும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரான மீட்பு செயல்முறையை
உறுதி செய்வதற்காக, நீர் விநியோகத்தைப் பெற்ற பயனர்களை அதை
விவேகத்துடன் பயன்படுத்துமாறு நிறுவனம் அறிவுறுத்துகிறது.

முகநூல், இன்ஸ்டாகிராம், X மற்றும் https://www.airselangor.com/ என்ற
இணையதளம் உள்ளிட்ட அனைத்து ஆயர் சிலாங்கூர் தகவல் தொடர்பு
ஊடகங்கள் மூலமாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இதுவரை குடிநீர் வழங்கப்படாதப் பகுதிகளின் பட்டியல்
அந்நிறுவனத்தின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


Pengarang :